News March 30, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 221 ▶குறள்: வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. ▶பொருள்: இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

Similar News

News April 1, 2025

பிரதமரை சந்திக்கிறார் ஓபிஎஸ்

image

பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் ஒருபுறம் அரசியல் ரீதியாக காய் நகர்த்தி வரும் நிலையில், வரும் 6ஆம் தேதி தமிழகம் வரும் மோடியை சந்திக்க, ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, 2026 சட்டமன்றத் தேர்தல், அதிமுக ஒருங்கிணைப்பு, கூட்டணி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவற்றை ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

News April 1, 2025

தவறுகளை சரி செய்யுமா CSK

image

மோசமான கேப்டன்சி, மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பல், பேட்டிங் ஆர்டரில் மாற்றம் என பல தவறுகளை செய்ததால் CSK அணி, அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. குறிப்பாக, தோனி பேட்டிங் ஆர்டரில் மாற்றம் பெரும் சர்ச்சையானது. இதனால், வரும் சனிக்கிழமை DCக்கு எதிரான போட்டியில், அனைத்து தவறுகளையும் சரி செய்தால் மட்டுமே CSK வெற்றிபெற முடியும். இல்லையென்றால், தகுதி சுற்றோடு வெளியேறும் என நெட்டிசன்கள் கொந்தளிக்கின்றனர்.

News April 1, 2025

ஆதவ் அர்ஜூனாவுக்கு மைத்துனர் எச்சரிக்கை

image

அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வரும் ஆதவ் அர்ஜூனாவுக்கு அவரது மைத்துனரும், மார்ட்டின் மகனுமான ஜோஸ் சார்லஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பதவி, பொருளாதார பேராசையைத் தீர்த்துக்கொள்ள ஆதவ் செய்யும் கிறுக்குத்தனங்களுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இனி எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!