News March 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 219
▶குறள்:
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
▶பொருள்: ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.
Similar News
News March 31, 2025
Vodafone கொடுத்த ₹36,950 கோடி.. ஓகே சொன்ன அரசு

Vodafone Ideaவின் ₹36,950 கோடி மதிப்பிலான பங்குகளை கையகப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. நிலுவையில் உள்ள ஸ்பெக்ட்ரம் ஏல நிலுவைத் தொகைக்கு ஈடாக, பங்குகளை பெற அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடனில் மூழ்கியுள்ள அந்நிறுவனத்தின் 22.6% பங்குகள் அரசிடம் உள்ள நிலையில், தற்போதைய அறிவிப்பின் படி அது 48.99% உயரும். இதன்மூலம், அந்நிறுவனத்தின் மிகப்பெரிய ஒற்றை பங்குதாரராக அரசு மாறும்.
News March 31, 2025
நிலநடுக்கத்தின் மத்தியிலும் தாக்குதல்

நிலநடுக்கத்தால் 1,700 மாண்ட நிலையிலும், மியான்மர் ராணுவம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதாக, அந்நாட்டின் கிளர்ச்சி அமைப்பு கரேன் நேஷனல் யூனியன் குற்றஞ்சாட்டியுள்ளது. மீட்பு பணிகளுக்கு செய்யாமல், படைகளை அனுப்பி மக்களை தாக்குவதாக அந்த அமைப்பு சாடியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ராணுவ தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. கடந்த 2021 முதல் அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.
News March 31, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 222 ▶குறள்: நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. ▶பொருள்: நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.