News March 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 218
▶குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
▶பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
Similar News
News December 14, 2025
நாளை அரையாண்டு தேர்வு.. மாணவர்களே ரெடியா இருங்க!

தமிழகத்தில் நாளை (டிச.15) 1 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ளன. டிச.23 வரை தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.10 முதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களே, *படிப்பதற்கு தேவையான நேரம் ஒதுக்குங்கள். *இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதை தவிருங்கள். *பதற்றமின்றி தேர்வுகளை எழுதுங்கள். ALL THE BEST
News December 14, 2025
அழகுடன், ஆரோக்கியம் பேணும் பழங்கள்

குளிர்காலத்தில் ஏற்படும் உடல்நல பிரச்னைகளை தடுப்பதோடு, சரும பொலிவையும் காக்கும் தன்மை பழங்களுக்கு உண்டு. குளிர்காலத்தில் எந்தெந்த பழங்கள் என்னென்ன நன்மைகளை அளிக்கின்றன என்பதை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்..
News December 14, 2025
பெஸ்ட் ரிவஞ்ச்.. ஒரே குடும்பத்தில் 3 கவுன்சிலர்கள்

கேரளாவின் பாலா நகராட்சியில் ‘புளிக்காகண்டம்’ குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுயேட்சையாக போட்டியிட்டு கவுன்சிலராகி உள்ளனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், வெற்றி பெற்றவர்களில் ஒருவரான பினுவிற்கு கடந்த முறை கேரளா காங்கிரஸ் சீட் கொடுக்க மறுத்துள்ளது. இம்முறை இதே குடும்பத்தில் இருந்துதான் வெற்றி பெற்ற அவரது மகள் தியா, UDF ஆதரவுடன் நகராட்சி தலைவராகவுள்ளார்.


