News March 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்
அதிகாரம்: ஒப்புரவறிதல்
குறள் எண்: 218
குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
Similar News
News August 13, 2025
‘கூலி’ படத்துக்கு போலி டிக்கெட்கள் ! ரசிகர்கள் அதிர்ச்சி

நாளை வெளியாக உள்ள ‘கூலி’ படத்துக்கான டிக்கெட்கள் மளமளவென விற்றுத்தீர்ந்துள்ளன. நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான் உள்ளிட்டோரும் படத்தில் உள்ளதால் தமிழகம் தாண்டி மற்ற மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதை பயன்படுத்தி டிக்கெட்டை ₹500 முதல் ₹3,000 வரை விற்கின்றனர். இதுபோதாது என போலி டிக்கெட்களும் கூலி படத்துக்கு விற்பனையாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. Careful மக்களே!
News August 13, 2025
அபிமன்யுவிற்கு சான்ஸ் கொடுக்க வேண்டும்: கங்குலி

அபிமன்யு ஈஸ்வரனுக்கு டெஸ்ட்டில் வாய்ப்பு வழங்க வேண்டும் என கங்குலி வலியுறுத்தியுள்ளார். அணியில் 3-வது இடத்தில் களமிறங்க அவர் பொருத்தமானவர் எனவும் தெரிவித்துள்ளார். அபிமன்யு கடந்த 4 ஆண்டுகளாக அணியில் இடம்பெற்றாலும், பிளேயிங் 11-ல் இடம்பெறவில்லை. முன்னதாக, தனது மகனுக்கு பின்பாக அணியில் இடம்பெற்ற 15 வீரர்கள் டெஸ்ட்டில் அறிமுகமாகிவிட்டதாக அவரது தந்தை ரங்கநாதன் வருத்தம் தெரிவித்திருந்தார்.
News August 13, 2025
பாஜகவில் தொடங்கி திமுக வரை… மைத்ரேயனின் பயணம்

<<17389413>>திமுகவில் இணைந்துள்ள மைத்ரேயன்<<>> 1999-ம் ஆண்டு பாஜகவில் இருந்து அதிமுகவில் சேர்ந்தார். 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மைலாப்பூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 2002, 2007, 2013 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சார்பாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்வானார். சிறிது காலம் OPS-வுடன் பயணித்த மைத்ரேயன் பிறகு பாஜகவில் இணைந்தார். தொடந்து EPS முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் நுழைந்தார்.