News April 22, 2025
புனித யாத்திரைக்கு முன்னதாக பயங்கர சதித்திட்டம்!

J&k-ல் இன்று நடந்த தீவிரவாத தாக்குதல், முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் என தெரியவந்துள்ளது. வரும் ஜூலை 3-ம் தேதி தொடங்க உள்ள அமர்நாத் யாத்திரையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பகுதிக்கு அருகே உள்ள பைஸ்ரீன் பள்ளத்தாக்கில் நுழைந்த தீவிரவாதிகள், அங்கு கூடியிருந்த சுற்றுலா பயணிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அமைச்சர் அமித்ஷா அப்பகுதிக்கு விரைந்துள்ளார்.
Similar News
News November 15, 2025
‘அம்மா நான் சாகப் போறேன்.. நீங்க சந்தோஷமா இருங்க’

‘அண்ணா இப்போது நீ மகிழ்ச்சியாக இருப்பாய் அல்லவா, நன்றாக படி. நான் இந்த வாழ்வில் சோர்வடைந்துவிட்டேன். அம்மா, நான் போகிறேன். அம்மா, அப்பா சந்தோஷமாய் இருங்க’. குஜராத்தில் தற்கொலை செய்துகொண்ட 6-ம் வகுப்பு மாணவியின் உருக்கமான கடைசி வரிகள் இவை. வீட்டில் தூக்கிட்ட மகளின் உடலை பார்த்து தாய் கதறி அழுதது பெரும் சோகம். சிறுமியின் இந்த சோக முடிவுக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. SO SAD.
News November 15, 2025
வெறும் ₹6-க்கு 2 நாள்களுக்கு 1GB/டே.. அரசின் PM WANI திட்டம்!

இணையவசதி என்பது அத்தியாவசிய தேவையாக மாறியுள்ள நிலையில், நாட்டின் அனைத்து மக்களும் இணையவசதி பெற, PM WANI என்ற திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. சிறு கடைகளையும் மக்கள் பயன்பெறும் வகையில் Wi-Fi Hub-ஆக மாற்றுவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. வெறும் ₹6-க்கு 2 நாள்களுக்கு 150 Mbps வேகத்தில் 1GB/ day வழங்கப்படுகிறது. PM WANI ஆப்பை டவுன்லோட் செய்து எளிதில், இந்த திட்டத்தில் சேரலாம்.
News November 15, 2025
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. இன்று முதல் அறிவிப்பு

பொங்கல் பரிசு வழங்கும் பணியை தமிழக அரசு இப்போதே தொடங்கிவிட்டது. நவ.15 முதல்(இன்று) ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்தார். இதனையடுத்து, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலைகளை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கத் தொடங்கியுள்ளனர். மேலும், பச்சரிசி, வெல்லம், கரும்பு, பரிசுத் தொகை உள்ளிட்டவை குறித்தும் அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.


