News April 25, 2025
கணவர் இறந்தது தெரியாத மனைவி.. கண்ணீர் கதை

‘என்னுடைய தாய் இதயநோயாளி என்பதால் தந்தை இறந்த செய்தியை அவரிடம் கூறவில்லை, காயமடைந்து சிகிச்சையில் உள்ளார் என்றே கூறியுள்ளோம்’ என பஹல்காம் தாக்குதலில் மரணமடைந்த கேரளாவைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகள் ஆர்த்தி கூறியுள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர், சமீபத்தில் இந்தியா வந்து, காஷ்மீருக்கு சுற்றுலா சென்றபோதுதான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்னும் எத்தனை கண்ணீர் கதைகளோ?
Similar News
News December 5, 2025
2-ம் நாளாக ஏற்றம்.. குஷியில் முதலீட்டாளர்கள்

தொடர்ந்து 4 நாள்களாக சரிந்த இந்திய பங்குச்சந்தைகள் நேற்று முதல் ஏற்றத்தை கண்டுள்ளன. RBI-ன் <<18475076>>ரெப்போ வட்டி குறைப்பு<<>>, இன்றைய ஏற்றத்திற்கு வலு சேர்த்துள்ளது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்ந்து, 85,712 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 153 புள்ளிகள் உயர்ந்து 26,186 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.
News December 5, 2025
பள்ளிகள் 12 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

அரையாண்டு தேர்வுகள் டிச.10- டிச.23 வரை நடைபெறவுள்ளன. 6-ம் வகுப்புக்கு காலை 10- 12 மணி, 7-ம் வகுப்புக்கு பிற்பகல் 2- 4 மணி, 8-ம் வகுப்புக்கு காலை 10- 12.30 மணி, 9-ம் வகுப்புக்கு பிற்பகல் 2- 4.30 மணி, 10-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி, 11-ம் வகுப்புக்கு பிற்பகல் 1.45 – மாலை 5 மணி, 12-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. டிச.24- ஜன.4 வரை 12 நாள்கள் விடுமுறையாகும்.
News December 5, 2025
பொடுகு பிரச்னையில் இருந்து மொத்தமாக விடுபட..

ஆரோக்கியமான கூந்தலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பொடுகு பிரச்னைக்கு ஆப்பிள் சைடர் வினிகர் தீர்வளிக்கும். சிறிது ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்து, அதனுடன் சம அளவு நீர் சேர்த்துக்கொள்ளுங்கள். தலைக்கு குளித்த பின், வினிகரை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு முடியை குளிர்ந்த நீரில் அலசி வந்தால் பொடுகு, அதனால் ஏற்படும் முடி உதிர்வு குறையும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.


