News June 20, 2024
கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினரை பார்த்து ஒட்டுமொத்த தமிழகமும் கலங்கி நிற்கிறது. கணவன், தந்தை, சகோதரனை இழந்த குடும்பத்தினர் ஆதரவற்று நிற்கின்றனர். அதில், 2 சிறுவர்கள் சிலுவையை சுமந்து தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட காட்சி கண்ணீரை வரவழைக்கிறது. தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News November 15, 2025
முதல் டெஸ்ட்: அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த இந்தியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பொறுமையாக விளையாடி வருகிறது. 2-ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை, 138/4 ரன்களை எடுத்துள்ளது. ஜடேஜா 11 ரன்களுடன், ஜுரெல் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ், மார்க்கோ யான்சன், போஷ், சைமன் ஹார்மர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 21 ரன்கள் பின்தங்கியுள்ளது.
News November 15, 2025
திங்கள்கிழமை இந்த மாவட்டங்களில் விடுமுறையா?

நாளை, நாளை மறுநாள் (திங்கள்) கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரத்தில் கனமழையும், சென்னையில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நவ.18-ல் காவிரி படுகை மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் மிக கனமழையும் தொடரும் எனவும் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், திங்கள்கிழமை அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 15, 2025
இன்னும் சற்று நேரத்தில் ராகுல் காந்தி ஆலோசனை

பிஹார் தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்., 6 இடங்களில் மட்டுமே வென்றது. தேசிய கட்சியான காங்.,கிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பாக, கட்சியின் மூத்த தலைவர்களுடன், மதியம் 12:00 மணிக்கு ராகுல் காந்தி ஆலோசனை நடத்தவுள்ளார். தொடர் தோல்விகள் தொடர்பாகவும், கட்சியின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.


