News June 25, 2024

சிறுவனின் மூக்கில் 14 நாள்கள் வாழ்ந்த அட்டைப்புழு

image

உத்தராகண்டில், சில நாள்களுக்கு முன்பு 19 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது, அருவியில் குளித்துள்ளார். அதை தொடர்ந்து, சில நாள்களாக சிறுவனின் மூக்கில் ஒருவித அசெளகரியம் ஏற்பட்டுள்ளது. பிறகு, சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மூக்கில் இருந்து 14 நாள்களுக்கு பின் அட்டைப்புழு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. சிறுவனின் ரத்தத்தை உறிஞ்சி அட்டை உயிர் வாழ்ந்து வந்துள்ளது.

Similar News

News March 2, 2026

நாளை சந்திர கிரகணம்.. எந்த நேரத்தில் நிகழும் தெரியுமா?

image

இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை (மார்ச் 3) நிகழ உள்ளது. இது பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிவடைகிறது. இந்தியாவில் மாலை 6.22 மணி முதல் 6.47 மணி வரை பார்க்க முடியும். சந்திர கிரகணம் காரணமாக, காசி, திருப்பதி, தர்மஸ்தலா, தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் என நாட்டின் முக்கியமான கோயில்களில் நாளை குறிப்பிட்ட நேரத்தில் நடை சாத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 2, 2026

₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு குட் நியூஸ்

image

மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். இது எந்த மாதத்தில் இருந்து வரவு வைக்கப்படும் என எதிர்பார்த்து மகளிர் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்த பின் ஜூனில் அதற்கான அறிவிப்பை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாம். தொடர்ந்து, திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 2, 2026

காங். இன்றி திமுகவுக்கு கஷ்டம்: நிர்மல் குமார்

image

திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது. மற்றொரு புறம் <<19279246>>ராகுல் காந்தி<<>> தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் மட்டும் இல்லையென்றால் திமுகவால் 25 தொகுதிகளைக் கூட தாண்ட முடியாது என தவெக நிர்மல்குமார் கூறியுள்ளார். இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் அதிகரித்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!