News November 23, 2024
மகாராஷ்டிராவில் அமைச்சராக போகும் தமிழர்?

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்கப் போவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், சயானி கோலிவாடா தொகுதியைக் கைப்பற்ற போகும் பாஜகவின் கேட்பன் தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கக்கூடும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் தேவேந்திர ஃபட்னாவீஸுக்கு மிக நெருக்கமானவர். தற்போது ஃபட்னாவீஸ்தான் அடுத்த முதல்வர் என்ற பேச்சு உள்ளதால், தமிழ்ச்செல்வன் அமைச்சராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 7, 2025
நீருக்குள் இருந்து காட்சி கொடுக்கும் சிவன்!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பகுதியில் மேலமலை என்ற சிறிய மலை குன்று உள்ளது. அக்குன்றில் தலையருவி சிங்கம் சுனையில், 15 அடி ஆழத்தில் ஜீரஹரேஸ்வரர் என்னும் குடைவரைக் கோவில் இருக்கிறது. இக்கோயிலில் குடைந்தே உருவாக்கப்பட்ட சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தருகிறார். சிவராத்திரி அன்று, உள்ளூர் மக்கள் சுனையில் உள்ள நீரை வெளியேற்றிவிட்டு, சிவனை தரிசித்து செல்கின்றனர். SHARE IT.
News November 7, 2025
Sports Roundup: ஜுரெல் சதத்தால் மீண்ட இந்தியா

*தென்னாப்பிரிக்கா A-வுக்கு எதிரான 2-வது பயிற்சி டெஸ்டில் ஜுரெல் 132 ரன்கள் குவிக்க இந்தியா A 255 ரன்களுக்கு ஆல் அவுட். *ஹாங்காங் 6’s தொடர் இன்று தொடங்குகிறது. *FIDE உலக கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தா 3-வது சுற்றுக்கு தகுதி. *பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ODI-ல் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி. *டி20-ல் 8-வது முறையாக அக்ஷர் பட்டேல் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார்.
News November 7, 2025
பிஹார் தேர்தலில் புதிய சாதனை.. 64.66% வாக்குப் பதிவு!

பிஹாரில் முதற்கட்டமாக நடந்த 121 தொகுதிகளுக்கான தேர்தலில், 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தனர். இதுவரை 62.57% வாக்குப்பதிவே அதிகமாக இருந்த நிலையில், தற்போது அதை விட அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக EC தெரிவித்துள்ளது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ளது.


