News May 15, 2024

பிரதமரிடம் வேட்புமனு பெற்ற தமிழர்

image

வாரணாசி தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரிடம் வேட்புமனுவை பெற்ற தேர்தல் அதிகாரி ராஜலிங்கம் தமிழர் ஆவார். தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த இவர், 2006ல் ஐபிஎஸ் தேர்வில் வென்று உ.பி. அலிகரில் பணியை தொடங்கினார். தொடர்ந்து, மீண்டும் குடிமைப் பணி தேர்வெழுதி 2009இல் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற இவர், மோடியின் அபிமானத்தை பெற்றவர் ஆவார்.

Similar News

News March 28, 2026

தவெகவை மறைமுகமாக தாக்கிய EPS

image

தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ள EPS திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், நேற்று தவெகவையும் தாக்கியுள்ளார். இன்னொரு கட்சி இருக்காங்க என்று ஆரம்பித்த அவர், இறந்தவர்கள் குடும்பத்தினரை பனையூர் வரவழைத்து அனுதாபம் கூறியதாகவும்; இதை கொடுமை என்றும் குறிப்பிட்டார். தேர்தல் பரப்புரையில் விஜய்யை EPS மறைமுகமாக சீண்டியது தேர்தல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. <<-se>>#TNELECTION2026<<>>

News March 28, 2026

வேட்பாளருக்கு எதிராக அதிமுகவினர் போர்க்கொடி

image

நாமக்கல் அதிமுக வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று ஒன்றிய செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நாமக்கல் தொகுதி வேட்பாளராக மோகன் என்பவரை அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியாக உள்ளதாகவும், இதற்காக மாவட்ட செயலாளர் தங்கமணிக்கு பெருந்தொகை கைமாறியிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் வேட்பாளரை மாற்றாவிட்டால் ஒட்டுமொத்தமாக பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

News March 28, 2026

BREAKING: திமுக கூட்டணிக்கு அதிர்ச்சி

image

<<19494650>>காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வு<<>> அனைத்தும் ரகசியமாக நடந்ததாகவும் கட்சியின் நலன் சமரசம் செய்யப்பட்டதாகவும் ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக கூட்டணிக் கட்சிகள் குறைவான தொகுதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து கேட்கும் தொகுதியும் கிடைக்கவில்லை என்ற மனவருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் ஜோதிமணியின் கருத்து திமுக கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. <<-se>>#TNELECTION2026<<>>

error: Content is protected !!