News October 24, 2024
புதுசு புதுசாக Record பதிக்கும் தமிழன்

நியூசி., அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் மொத்தம் 189 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்து நாதன் லயன் 187 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
Similar News
News January 22, 2026
மேக்ரான் சன்கிளாஸ் அணிந்திருந்த காரணம் என்ன?

உலகப் பொருளாதார மன்றத்தில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உரையை விட அவரது சன்கிளாஸ்தான் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அவர் கண் பிரச்சினை காரணமாகவே கண்ணாடியை அணிந்ததாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், அமெரிக்க – பிரான்ஸ் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், டிரம்ப்பிற்கு அவர் மறைமுகமான எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம் என்று பலரும் கருத்து கூறுகின்றனர்.
News January 22, 2026
திமுகவின் ஊழல் ஆட்சியால் மக்கள் சோர்வு: அமித்ஷா

NDA கூட்டணியில் TTV தினகரன் இணைந்ததை வரவேற்பதாக அமித்ஷா கூறியுள்ளார். தனது X பதிவில், திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் சோர்வடைந்துவிட்டதாக அவர் சாடியுள்ளார். மேலும் PM மோடி தலைமையிலான NDA கூட்டணியால், தமிழகம் வளர்ச்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்ல இருப்பதை ஆசீர்வதிக்க மக்கள் தயாராகிவிட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.