News November 19, 2024

வீராங்கனை உயிரிழப்பில் திடீர் திருப்பம்

image

கோவையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை எலினா லாரெட் (15), இறந்ததற்கு <<14643248>>சிக்கன் ரைஸ்<<>> காரணமல்ல என போலீசார் தெரிவித்துள்ளனர். ம.பி.க்கு போட்டிக்கு சென்ற அவருக்கு, விளையாட்டின் போது வயிற்று, மார்புப் பகுதியில் சதை கிழிந்துள்ளது. இதனை அறியாத அவர், வயிற்றில் வலி ஏற்பட்டதால், உடல் உபாதைப் பிரச்னை எனக்கருதி சென்னை திரும்பியதும் சிகிச்சை மேற்கொண்டதால், நுரையீரல் செயலிழந்து மரணம் நிகழ்ந்ததாகவும் கூறினர்.

Similar News

News April 6, 2026

ICC மார்ச் 2026 சிறந்த வீரர்: போட்டியில் சஞ்சு & பும்ரா!

image

சஞ்சு சாம்சன் & பும்ரா மார்ச் 2026 ICC சிறந்த வீரருக்கான நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். T20I WC-ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இருவரும் நாமினேட்டாகி உள்ளனர். இவர்களுடன் SA இளம் பேட்ஸ்மேன் கானர் எஸ்டர்ஹுய்சனும் பட்டியலில் உள்ளார். உங்களின் ஃபேவரைட் வீரருக்கு வாக்களிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும். இந்த விருதுக்கு யார் சரியான ஆள்’னு நினைக்கிறீங்க?

News April 6, 2026

பயிர்க்கடன் தள்ளுபடி.. EPS தேர்தல் வாக்குறுதி

image

அதிமுக ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என EPS தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். ஏற்கெனவே, கல்வி கடன் தள்ளுபடி, நடைபாதை வியாபாரிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 6, 2026

முன்பு கொரோனா.. இப்போது LPG: ராகுல் காந்தி

image

கொரோனாவை போலவே எரிவாயு பற்றாக்குறை நெருக்கடியையும் மோடி அரசு மோசமாக கையாள்வதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சமையல் எரிவாயுவின் விலையை சமாளிக்க முடியாததால், புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் சொந்த கிராமங்களுக்கு தப்பி ஓடுகிறார்கள் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், எந்த நெருக்கடி வந்தாலும் முதலில் ஏழைகள் பாதிக்கப்படும் நிலை இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!