News May 26, 2024

ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்

image

வங்கக்கடலில் உருவான ரெமல் புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில், ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தூரத்துக்கு திடீரென கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் படகுகள் தரை தட்டி நிற்கின்றன. இதை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். காலநிலை மாற்றத்தாலேயே கடல்நீர் உள்வாங்கியிருப்பதாகவும், விரைவில் கடல்நீர் பழைய நிலைக்கு திரும்பி விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 16, 2025

ஆண்களே, KGF ஹீரோ மாதிரி தாடி வளரணுமா?

image

ஆண்களே, என்ன செய்தாலும் தாடி வளரவில்லை என கவலையா? இதை செய்து பாருங்கள், உங்களுக்கும் தாடி வளரும். ➤விளக்கெண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம் ➤போதுமான அளவு தூங்க வேண்டும் ➤முடி வளர்ச்சிக்கு காரணமான டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் மீன், முட்டை, வேர்க்கடலையை உட்கொள்ளுங்கள் ➤போதுமான அளவு தண்ணீர் குடிக்கணும் ➤ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். தாடி இல்லாத உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 16, 2025

ராகுல் காந்திக்கு ஷாகித் அஃப்ரிடி ஆதரவு

image

பாஜக ஆட்சிக்கு வர, இந்து – முஸ்லீம் மத அரசியலை தொடர்ந்து கையிலெடுப்பதாக பாக்., முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி விமர்சித்துள்ளார். ஆனால், ராகுல் காந்தி ஒட்டுமொத்த உலகத்துடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புவதாக ஆதரவு தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பையில் IND vs PAK போட்டி முடிவில், இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்ததன் பின்னணியில் மேலிட உத்தரவு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News September 16, 2025

நாளை புரட்டாசி.. பெருமாளை வழிபட உகந்த நேரம் ?

image

பெருமாளுக்கு உகந்த மாதங்களில் ஒன்றாக கருதப்படும் புரட்டாசி நாளை தொடங்குகிறது. பெருமாளை வழிபட உகந்த நேரம்:
காலை 06 முதல் 7:20 வரை, காலை 09:10 முதல் 10:20 வரை மாலை 6 மணிக்கு மேல், இந்த ஆண்டு புதன்கிழமையில் துவங்குவதால் முடிந்தவர்கள் காலையிலேயே வழிபாடு செய்து, விரதத்தை துவக்கி விடலாம். முடியாதவர்கள் மாலையில் கூட பெருமாள் வழிபாட்டினை செய்து கொள்ளலாம். உங்களது நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!