News August 15, 2024

தடுமாறி வரும் தென்னாப்பிரிக்கா அணி

image

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்துவரும் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மார்க்ரம் 14, டோனி 1, ஸ்டப்ஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் கேப்டன் தெம்பா பவுமா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சற்றுமுன்பு வரை தெ.ஆ., 26 ஓவர்கள் முடிவில் 64/4 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. ஷமர் ஜோசப் 2 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

Similar News

News November 24, 2025

BREAKING: வால்பாறை மாணவி உயிரிழப்பு.. அதிரடி நடவடிக்கை

image

வால்பாறையில் சில நாள்களுக்கு முன் பள்ளி மாணவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தில், பெற்றோர் புகாரின் பேரில் 3 ஆசிரியைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவி வீடியோ வாக்குமூலத்தில் ஆசிரியைகள் துன்புறுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தது. இதையடுத்து ரமணிபாய், சிந்தியா, ஷியாமளா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

News November 24, 2025

நாளை பள்ளிகள் விடுமுறையா? கலெக்டர்களுக்கு உத்தரவு

image

தமிழகத்தில் 3 நாள்கள் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கலெக்டர்களுக்கு முக்கிய உத்தரவு பறந்துள்ளது. டெல்டா & தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. நேற்று இதேபோல் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. SHARE IT.

News November 24, 2025

உரிய நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம்: பிரேமலதா

image

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக முத்திரை பதிக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதிமுகவுடனான <<18372669>>கூட்டணி<<>> முறிந்து போனதாக கூறுவதில் உண்மையில்லை என தெரிவித்திருந்த அவர், உரிய நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். தேமுதிக இடம்பெறும் கூட்டணியே தேர்தலில் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!