News August 21, 2024

தடுமாறும் மோடி 3.0 அரசு?

image

மோடி 3.0 அரசு பொறுப்பேற்ற 3 மாதங்களில், அறிவித்த 4 விஷயங்களில் இதுவரை பின்வாங்கியுள்ளது. ஒளிபரப்பு சேவை ஒழுங்குமுறை மசோதாவை திரும்பப் பெற்ற அரசு, வக்ஃப் மசோதாவினை ஆய்வு செய்ய JPC-க்கு அனுப்பியது. கடும் எதிர்ப்பு LSGT வரி குறியீட்டு பலன்களைக் குறைத்து, பின்னர் அதிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது லேட்ரல் என்ட்ரி. பெரும்பான்மை பலம் இல்லாததே இந்த தடுமாற்றங்களுக்கு காரணமெனக் கூறப்படுகிறது.

Similar News

News March 10, 2026

BIG NEWS: விஜய்யிடம் இருந்து விலகி திமுகவுடன் இணைந்தார்

image

தவெக கூட்டணியிலிருந்து விலகுவதாக ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அறிவித்துள்ளது. 8 மாதங்களாக தவெகவோடு பயணித்த நிலையில், அவர்களது செயல்பாடுகள் சரியில்லாததால் ஆதரவை முழுவதுமாக வாபஸ் பெறுவதாக அக்கட்சியின் தலைவர் MF தமீம் தெரிவித்துள்ளார். அத்துடன், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பதாகவும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் தமீம் தெரிவித்துள்ளார்.

News March 10, 2026

3 ஆண்டுகளில் 5 கோப்பைகள் வென்ற இந்திய அணிகள்!

image

2023-ம் ஆண்டு Men’s ODI WC-யை இந்தியா நழுவவிட்டது ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியது. இதையடுத்து, வீறுகொண்டு எழுந்த இந்தியா 5 ICC கோப்பைகளை வென்றுள்ளது. ODI WC-யை தவறவிட்ட ரோஹித் படை, 2024 T20I WC & 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. பெண்கள் அணி 2025 ODI WC-யை முதல்முறை முத்தமிட்டது. சில மாதங்களுக்கு முன், U19 இந்திய அணி ODI WC-யை வென்ற நிலையில், தற்போது SKY படை T20I WC-யை தக்கவைத்து கொண்டுள்ளது.

News March 10, 2026

வீடுகள் விலை… ஒரே நாளில் ₹7.3 கோடி குறைந்தது

image

போர் காரணமாக துபாய் மற்றும் அபுதாபியில் ரியல் எஸ்டேட் பெரும் சரிவை சந்தித்துள்ளது. அபுதாபியில் 4BHK அடுக்குமாடி குடியிருப்பின் விலை ஒரே நாளில் ₹7.3 கோடி குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போர்ச் சூழல் தொடர்ந்தால் UAE-யின் பொருளாதாரம் சரியும் என்றும், இது வளைகுடாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!