News April 25, 2024
தடுமாறும் ஹைதராபாத் அணி

RCB அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் SRH அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கடந்த சில போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய SRH அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் இன்று சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தற்போது வரை SRH 12 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. SRH வெற்றிபெற இன்னும் 48 பந்துகளில் 88 ரன்கள் தேவை. RCB சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது.
Similar News
News January 23, 2026
பட்ஜெட்டை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டம்

பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் முன் எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து, அவர்களது கோரிக்கைகளை அரசு தரப்பு கேட்பது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு 2 கட்டங்களாக நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்பதற்காக வரும் 27-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. நாடாளுமன்றத்தின் பிரதான கமிட்டி அறையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
News January 23, 2026
கறிக்கோழி வளர்ப்பு பிரச்னைக்கு தீர்வு குழு

கறிக்கோழி வளர்ப்பு கூலியை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கறிக்கோழி வளர்ப்பு குறித்து ஆய்வு செய்திட மாவட்ட அளவில் தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு, பண்ணை உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தி, கோழி வளர்ப்பில் உள்ள பிரச்னை குறித்து ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 23, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 23, தை 9 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 PM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:30 AM ▶திதி: பஞ்சமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.


