News March 17, 2024

தடுமாறும் டெல்லி கேபிட்டல்ஸ்

image

பெங்களூரு அணிக்கு எதிரான WPL இறுதிப் போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி தடுமாறி வருகிறது. முதலில் அதிரடியான தொடக்கத்தை கொடுத்த டெல்லி அணி, 8ஆவது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர், பவுண்டரி எதுவும் அடிக்காமல் நிதானமாக விளையாடி வந்த டெல்லி அணி, 13ஆவது ஓவரில் மீண்டும் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறி வருகிறது. சோஃபி-3, ஷ்ரேயங்கா, ஆஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகின்றனர்.

Similar News

News December 4, 2025

பிஸ்கெட்டில் துளை இருப்பது ஏன் தெரியுமா?

image

பலரது ஃபேவரைட்டாக இருக்கும் பிஸ்கெட்டில் துளைகள் இருப்பது ஏன் என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? பிஸ்கெட்டில் உள்ள துளைகள் ‘Dockers’ என அழைக்கப்படுகிறது. பேக்கிங் செய்யும்போது மாவு மிகவும் உப்பிவிடக்கூடாது எனவும் பிஸ்கெட் கிரிஸ்பியாக வரவேண்டும் என்றும் இந்த செய்முறை பின்பற்றப்படுகிறது. இப்படி செய்வதால் பிஸ்கெட் உடையாமலும் இருக்குமாம். 1% பேருக்கு மட்டுமே தெரியும், SHARE THIS.

News December 4, 2025

BREAKING: இன்றே தீபம் ஏற்ற கோர்ட் உத்தரவு

image

திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்டிருந்த 144 தடையை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் வழக்கை மீண்டும் ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வருகிறார். அப்போது மதுரை காவல் ஆணையர் மற்றும் கலெக்டரிடம் கோர்ட் உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தீபத்தூணில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

News December 4, 2025

இந்தியா இதை செய்தாக வேண்டும்: ரஷ்ய MLA

image

S-500 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்க, ரஷ்ய அதிபர் புடினிடம் இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என பாட்னாவில் பிறந்த ரஷ்ய MLA-வான அபே சிங் வலியுறுத்தியுள்ளார். இது போன்ற அமைப்பு சீனாவிடம் கூட இல்லை எனவும், வேறு நாடுகளுக்கு விற்காமல் ரஷ்யா மட்டுமே பயன்படுத்தும் இந்த அமைப்பை இந்தியா பெற்றால், மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ரஷ்யாவின் குருஸ்க் பகுதி MLA-ஆக அபே சிங் உள்ளார்.

error: Content is protected !!