News February 16, 2025
வலிமையான கூட்டணி அமையும்: EPS

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக தலைமையில் வலுவான வெற்றிக் கூட்டணி அமையும் என வேலூர் பொதுக்கூட்டத்தில் EPS பேசினார். கடந்த தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி பிரிந்தது அவர்களது வாக்குகளை சிதறடித்தது. இதனையடுத்து, வரும் தேர்தலில் அவர்கள் இணையலாம் என்றும், விஜய் அதிமுகவுடன் இணையலாம் என்றும் பேச்சு எழுந்துவரும் நிலையில் இபிஎஸ் இப்படி பேசியுள்ளார்.
Similar News
News March 5, 2026
Swiggy, Zomato-வுக்கு போட்டியாக வந்தாச்சு Rapido-வின் Ownly!

பெங்களூருவில் Ownly செயலியின் மூலம் உணவு டெலிவரி மார்க்கெட்டில் Rapido கால்பதித்துள்ளது. ஹோட்டல் பில்லுடன் சேவை கட்டணமும் அதிகமாக இருப்பதால், மொத்த பில் அதிகமாக இருப்பதாக Zomato, Swiggy மீது தொடர் விமர்சனங்கள் உள்ளன. இந்த நிலையில்தான், Ownly ஆப் சேவை கட்டணமே இல்லாமல் அறிமுகமாகியுள்ளது. பெங்களூருவில் தங்களது மாடல் ஹிட்டானால், பிற நகரங்களுக்கும் சேவையை விரிவுப்படுத்தவும் Rapido திட்டமிட்டுள்ளதாம்.
News March 5, 2026
கடைசி நேரத்தில் மாறியது.. தமிழக அரசியலில் பரபரப்பு

பாமகவை தனது கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவை தேர்தலில் அன்புமணியும், ராஜ்யசபா தேர்தலில் சௌமியாவும் போட்டியிட திட்டமிடப்பட்டிருப்பதாக பேச்சு எழுந்தது. இன்று காலை வரை இதுதான் நிலைமை. ஆனால், கடைசி நேரத்தில் பெரிய ட்விஸ்ட்டாக அன்புமணி ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதேநேரம், மாற்று வேட்பாளராக செளமியா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
News March 5, 2026
கிறிஸ்டோபர் திலக்கிற்கு ராஜ்யசபா சீட் எப்படி வந்தது?

திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், தங்கபாலு போன்றோர் ராஜ்யசபா சீட் கேட்டு டெல்லியில் முகாமிட்டனர். ஆனால், காங்., தலைமையோ, சீனியர்களை விட, தற்போது தமிழ்நாட்டிற்கு புதிய தலைவரை அடையாளப்படுத்த விரும்பியது. இதனால், ராகுலுக்கு நெருக்கமான கிறிஸ்டோபர் திலக்கிற்கு ராஜ்யசபா சீட் கொடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் டெல்லியில் தமிழகத்தின் குரலாக இவர் ஒலிப்பார் என்றும் கூறப்படுகிறது.


