News April 15, 2025
வரிசைக்கட்டிய சாதனைகள்… அசத்திய ‘தல’ தோனி

CSK கேப்டன் தோனி LSG-க்கு எதிரான மேட்ச்சில், அடுத்தடுத்த ரெக்கார்டுகளை படைத்துள்ளார் *IPL-ல் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் பட்டியலில் 2வது இடம்(18). முதல் இடத்தில் ரோஹித் (19) இருக்கிறார் *ஸ்டம்பிங், கேட்ச், ரன் அவுட்கள் சேர்த்து IPL-ல் 200 விக்கெட் வீழ்த்திய முதல் விக்கெட் கீப்பர் * IPL வரலாற்றிலேயே, அதிக இன்னிங்ஸில்(132) சிக்ஸ் அடித்த வீரர் போன்ற ரெக்கார்டுகளை தோனி படைத்துள்ளார்.
Similar News
News January 20, 2026
தூத்துக்குடி: இளைஞர் கொலையில் ஆயுள் தண்டனை

திருச்செந்தூர் ராஜேஷ் கண்ணா நகரில் வசித்தவர் மேடை அலங்கார கலைஞர் கந்தசாமி. இவரது வீட்டின் மாடியில் ராஜஸ்தானை சேர்ந்த வினோத் தாராகா(26) வசித்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு மது போதையில் ஏற்பட்ட தகராறில் கந்தசாமி, கல் மற்றும் அம்மி குலவியால் வினோத் தாராகாவை தாக்கி கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் கந்தசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
News January 20, 2026
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை இன்றும் தாறுமாறாக அதிகரித்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $65.14 உயர்ந்து $4,661.41-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ்-க்கு $3.06 உயர்ந்து $93.19 ஆக உள்ளது. இதனால், இன்று (ஜன.20) இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 20, 2026
கோயிலுக்குச் செல்லும் பொழுது..

எப்போதும் கோயிலுக்கு செல்லும் போது, சில விஷயங்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் *பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது *வெறும் கையுடன் செல்லாமல், குறைந்தபட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும் *குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது * கைலி, தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது *ஈர துணி, அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது. SHARE IT.


