News March 30, 2024
தமிழகம் காக்கும் வியூகம்

மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாதது தியாகமல்ல; தமிழகம் காக்கும் வியூகம் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ஈரோட்டில் பேசிய அவர், “கவர்னரை அனுப்பி திமுக ஆட்சிக்கு மத்தியில் இருப்பவர்கள் தொல்லை தருகிறார்கள். வரியாக ஒரு ரூபாய் கொடுத்தால், 29 காசு மட்டும் தந்து, நம் அடிவயிற்றில் கை வைக்கின்றனர். நம் மீது கை வைப்பவர்களை எதிர்க்க ஒரு விரல் மை போதும்” என்றார்.
Similar News
News January 4, 2026
வெனிசுலா புதிய அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்!

<<18758081>>அதிபர் மதுரோ<<>> சிறைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, முறையான ஆட்சிமாற்றம் வரும்வரை வெனிசுலாவை அமெரிக்காவே தற்காலிகமாக நிர்வகிக்கும் என டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வெனிசுலாவின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை, இடைக்கால அதிபராக நியமித்து, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்(SC) உத்தரவிட்டுள்ளது. நாட்டின் நிர்வாகத்தை தொடரவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக SC தெரிவித்துள்ளது.
News January 4, 2026
தங்கம் விலை சவரன் ₹1,00,800

தங்கம் விலை இன்று (ஜன.4) மாற்றமின்றி காணப்படுகிறது. நேற்று காலை 22 கேரட் கிராமுக்கு ₹60 குறைந்த நிலையில், மாலையில் ₹80 அதிகரித்தது. இதனால் கிராம் ₹12,600-க்கும், சவரன் ₹1,00,800-க்கும் விற்பனையாகிறது. நேற்று தங்கம் உயர்ந்ததால் இன்று குறையும் என எதிர்பார்த்த நிலையில், விலையில் மாற்றம் இல்லாததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News January 4, 2026
T20I WC போட்டிகள்: இந்தியாவில் இருந்து மாத்துங்க..

வங்கதேசத்தில் இந்து ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, IPL தொடரிலிருந்து வங்கதேச வீரர் <<18757649>>முஸ்தபிசுர் ரஹ்மான்<<>> நீக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த நிலையில், கொல்கத்தா, மும்பையில் நடைபெறும் தங்களது மேட்ச்களை இலங்கைக்கு மாற்ற வங்கதேச அணி, ICC-யிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களது வீரர்களின் பாதுகாப்பை கருதி இந்த முடிவு எனவும் கூறப்படுகிறது.


