News October 1, 2025
உருவானது புயல் சின்னம்.. கனமழை கொட்ட போகுது

மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், 5-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் குடையை மறக்க வேண்டாம்!
Similar News
News October 1, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. ரூல்ஸ் மாறுது!

மகளிர் உரிமைத் தொகை திட்ட விதிமுறையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு மாதந்தோறும் ₹8,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ₹1,000 பெறுபவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், விண்ணப்பிக்க முடியாத சூழல் உள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
News October 1, 2025
இந்திய கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பு இவ்வளவா!

2025 M3M Hurun இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, ரோஷினி நாடார் குடும்பங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. Perplexity நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் (31), இந்தியாவின் இளம் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார். மேலும், இந்த பட்டியலில் ஷாருக்கான் முதல் முறையாக இணைந்துள்ளார். இவர்களின் சொத்து மதிப்பை அறிய மேலே போட்டோக்களை Swipe செய்யவும்.
News October 1, 2025
டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வரும் புடின்

இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க, வரும் டிச. 5 மற்றும் 6-ம் தேதிகளில் புடின் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். மேலும், ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா வரிவிதித்துள்ள நிலையில், ரஷ்ய அதிபரின் வருகை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.