News October 25, 2025
உருவானது புயல் சின்னம்.. தமிழகம் முழுவதும் அலர்ட்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுதினம் புயலாக மாறும் என IMD கணித்துள்ளது. இதனால், தமிழகம், புதுவையில் 9 இடங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடியில் புயல் கூண்டு ஏற்றப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 17, 2026
அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு..

TN-ல் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்கள் மாதந்தோறும் ரேஷன் பொருள்களை பெற்று வருகின்றனர். இந்த மாதம் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி, பொங்கல் விடுமுறையால், மாத ரேஷன் பொருள்கள் வழங்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. குடியரசு தினத்தை ஒட்டியும் 2 நாள்கள் விடுமுறை வருகிறது. எனவே, பிப்ரவரியில், ஜனவரி மாத பொருளையும் சேர்த்து வழங்க மக்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், அரசு இதை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
News January 17, 2026
தேர்தல் வாக்குறுதி: திமுகவை முந்திக் கொண்ட அதிமுக

திமுகவை முந்திக் கொண்டு மகளிருக்கு ₹2,000, ஆண்களுக்கு இலவச பஸ் உள்ளிட்ட வாக்குறுதிகளை <<18879658>>அதிமுக <<>>கொடுத்துள்ளது. இதுபோன்ற பல அறிவிப்புகள் இனி வெளியாக வாய்ப்பு இருப்பதால், திமுகவுக்கு நெருக்கடியாக மாறியிருக்கிறது. அதுமட்டுமல்ல, திமுகவும் அதிமுகவை விட சிறப்பான தேர்தல் அறிக்கை கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால், தேர்தலில் திமுக, அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் பிரதானமாக எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
News January 17, 2026
டாஸை இழந்தது இந்தியா

U-19 World Cup: இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேசம், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மழை காரணமாக டாஸ் போடுவதில் சற்று தாமதமானது. தற்போது இந்திய அணி சார்பில், வைபவ் சூரியவன்ஷி, ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். IND: ஆயுஷ் மாத்ரே(C), வைபவ் சூரியவன்ஷி, வேதாந்த், விஹான், அபிக்யன் குண்டு, சவுகான், பங்கலியா, அம்பரீஷ், ஹெனில், தீபேஷ், கிலான் படேல்.


