News June 29, 2024
இந்திரா காந்திக்கு சிலையா? கலங்கும் திமுகவினர்

சென்னையில் ₹50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை வைக்கப்படுமென அண்மையில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்படும் முன்பு, இந்திரா சிலைக்கே கடைசியாக மாலை அணிவித்தார். இதேபோல் இந்திராவுக்கு சிலை அமைக்கும் முயற்சியால் வாழப்பாடி ராமமூர்த்தி, மூப்பனாரின் அரசியல் வாழ்க்கை இறங்குமுகம் கண்டது. இதனை நினைத்து, திமுகவினர் தற்போது கலக்கமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News November 21, 2025
ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார் PM மோடி

தென்னாப்பிரிக்காவில் இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டில் PM மோடி பங்கேற்கிறார். 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், 3 அமர்வுகளில் PM மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலையான பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றம், எதிர்கால தொழில்நுட்பம் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மாநாட்டிற்கு மத்தியில், சில தலைவர்களுடன் PM மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 21, 2025
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. தங்கம் 1 அவுன்ஸ்(28g) $16.32 சரிந்து $4,065-க்கும், வெள்ளி(1 அவுன்ஸ்) $0.83 குறைந்து $50.74-க்கும் விற்பனையாகிறது. நேற்று(நவ.20) சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்த நிலை நீடித்ததால் நம்மூர் சந்தையில் சவரனுக்கு ₹800 குறைந்தது. இன்றும் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News November 21, 2025
ரஜினி – கமல் காம்போவில் இளையராஜா இணைவாரா?

கமல் தயாரிக்க ரஜினி நடிக்கும் படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சுந்தர் சி வெளியேறியதால், மற்ற இயக்குநர்களிடம் கதை கேட்கும் பணியில் ரஜினி தீவிரமாக உள்ளனர். இதனிடையே இந்த படத்தில் இளையராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதா என கமலிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இசையமைப்பாளர், இயக்குநர் எல்லாவற்றையும் ரஜினியே தேர்வு செய்வார் என அவர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.


