News May 4, 2024

பிரஜ்வால் வீட்டிற்கு சென்ற சிறப்பு புலனாய்வு குழு

image

பிரஜ்வால் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கர்நாடக எம்.பி பிரஜ்வால் பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியான நிலையில், அவர் வெளிநாட்டில் தலைமறைவானார். அவரின் மீதான புகாரை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினர், பிரஜ்வாலை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில், அவரின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள், குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Similar News

News January 31, 2026

இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்!

image

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை 1947 நவ. 26-ல் அன்றைய FM ஆர்.கே.சண்முகம் தாக்கல் செய்தார். கோவையை சேர்ந்த இவர், நேருவின் அமைச்சரவையில் ஓராண்டு மட்டுமே நிதியமைச்சராக இருந்தார். இதில், ₹197.39 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதில் பாதுகாப்புக்காக ₹92.74 கோடியும், மொத்த வருவாய் ₹171.15 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டது. இவரே ‘இடைக்கால பட்ஜெட்’ என்ற சொல்லையும் உருவாக்கியவர்.

News January 31, 2026

மாம்பழம் சின்னம் யாருக்கு?

image

மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ECI அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக்கோரி, ராமதாஸ் தரப்பு சென்னை HC-ல் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 2-ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே யாருடன் கூட்டணி என்பதை இறுதி செய்ய முடியாமல் தவித்து வரும் ராமதாஸ் தரப்பு, இந்த வழக்கின் தீர்ப்புக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

News January 31, 2026

4,00,000,000,000 ரூபாய் மோசடி.. சற்றுமுன் ED அதிரடி கைது

image

40 ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்(RCOM) நிறுவனத்தின் Ex தலைவர் புனித் கார்க்கை ED அதிரடியாக கைது செய்துள்ளது. ED அறிக்கையின்படி 2001 – 2025 வரை RCOM-ன் முக்கிய பொறுப்புகளிலிருந்த புனித் கார்க், சட்டவிரோதமாக பல ஆயிரம் கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் புனித் கார்கேவின் 11 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!