News March 17, 2024
அஷ்வினுக்கு சிறப்பு பரிசு

டெஸ்டில் பல சாதனைகள் படைத்த அஷ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சிறப்பு பரிசு வழங்கியுள்ளது. 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கௌரவிக்கும் பொருட்டு அவருக்கு தங்க நாணயங்களால் 500 என வடிவமைக்கப்பட்ட சிறப்பு பரிசை வழங்கி கௌரவித்துள்ளது. டெஸ்டில் 500 விக்கெட்டுகள் என்ற சாதனையை நிகழ்த்திய அஷ்வினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News October 15, 2025
சீமானுக்கு மனநல பாதிப்பு: செல்லூர் ராஜூ

சீமான் அண்மை காலமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார் என செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். குறிப்பாக தவெக தொடங்கப்பட்டதில் இருந்துதான் அவர் இப்படி பேசுவதாக கூறிய அவர், விஜய்யை சீமான் தொடர்ந்து தாக்கி வருவதாக குறிப்பிட்டார். மேலும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களை விமர்சிக்க சீமானுக்கு எந்த தகுதியும் இல்லை எனவும் அவர் சாடியுள்ளார்.
News October 15, 2025
சற்றுமுன்: விலை மீண்டும் உயர்வு.. 2 நாளில் ₹10000

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹207-க்கும், கிலோ வெள்ளி ₹2,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹9 ஆயிரம், இன்று ஆயிரம் என 2 நாளில் ₹10000 உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாள்களே இருக்கும் நிலையில், தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்பில்லை என நகை கடைக்காரர்கள் கூறுகின்றனர்.
News October 15, 2025
பாலிவுட் வரை சிரிக்க வைத்த வடிவேலு

‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் குலசேகர ராஜாவாக நடித்தவர் குல்ஷன் தேவய்யா. பாலிவுட் நடிகரான இவர், 2018-ல் தான் நடித்த ‘Mard Ko Dard Nahi Hota’ என்ற படத்தில் வடிவேலுவை போல செய்ததை நினைவுகூர்ந்துள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தென்னிந்திய சினிமா பற்றி பேசிய அவர், ‘ஹய்யோ ஹய்யோ’ என்ற வடிவேலுவின் டயலாக்கை தான் பயன்படுத்தியதாகவும், அவரது முக பாவனைகள் தனக்கு பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.