News June 27, 2024
கைது செய்ய விரைந்தது தனிப்படை

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ₹100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்த புகாரில், அவரின் முன் ஜாமின் மனு தள்ளுபடியானது. இந்நிலையில், விஜயபாஸ்கர் இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு துப்பு கிடைத்துள்ளதாகவும், கைது செய்ய தனிப்படை விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 2, 2026
48 முக்கிய தலைவர்களை கொன்றுள்ளோம்: டிரம்ப்

ஈரான் மீதான அமெரிக்க ராணுவத் தாக்குதல்களில் ஈரான் உயர் தலைவர் கமேனி உள்பட 48 முக்கிய தலைவர்களை கொன்றுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் திட்டமிட்டதை விட ஈரான் மீதான தாக்குதல் வேகமாக, மிக சிறப்பாகவே நடைபெறுகிறது என்று கூறியுள்ளார். ஈரான் மீதான தாக்குதலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவது பற்றியோ, எண்ணெய் விலை உயர்வது பற்றியோ கவலையில்லை எனவும் பேசியிருந்தார்.
News March 2, 2026
OPS நீங்கள் இப்படி செய்யலாமா? புகழேந்தி

மூன்று முறை CM ஆக இருந்த OPS திமுகவில் இணைந்து பெரிய தப்பு செய்துவிட்டார் என அவரது ஆதரவாளராக இருந்த புகழேந்தி விமர்சித்துள்ளார். சேலத்தில் பேசிய அவர், OPS அண்ணா.. எத்தனை முறை அண்ணா என்று அழைத்திருப்பேன்… யாரு வேண்டுமானாலும் போயிருந்திருக்கட்டும்.. ஆனால் நீங்கள் போயிருக்கலாமா என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார். தன்னை நம்பி இருந்தவர்களை OPS நடு ஆற்றில் விட்டுவிட்டார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News March 2, 2026
ராசி பலன்கள் (02.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


