News July 24, 2024

‘தி கோட்’ படத்தில் ஸ்ருதி பாடிய பாடல்

image

விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 3ஆவது பாடல் அடுத்த சில நாள்களில் வெளியாகும் எனவும், இந்த பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஸ்ருதி பாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 3, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News March 3, 2026

பாஜக மிரட்டலால் கூட்டணியில் இணைந்த கட்சிகள்: உதயநிதி

image

மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய <<19273321>>மோடி <<>>தன்னை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம் என உதயநிதியை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், பயப்பட வேண்டாம் என தங்களிடம் சொல்வதை விட, உங்கள் கூட்டணி கட்சி தலைவர்களிடம் சொல்வதே சரியாக இருக்கும் என உதயநிதி பதில் அளித்துள்ளார். பாஜகதான் பல கட்சிகளை மிரட்டி அவர்களுடன் இணைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

News March 3, 2026

கல்லீரலை பாதுகாக்க இரவில் 3 விசயங்களை கடைபிடிங்க!

image

இந்தியாவில் 40% பேருக்கு கல்லீரல் பாதிப்பு உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதனை தடுக்க இந்த 3 பழக்கங்களை பின்பற்றுமாறு டாக்டர்கள் கூறுகின்றனர். அதன்படி இரவு 9 மணிக்குள்ளாக சாப்பிட வேண்டும். இதனால் கல்லீரலில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். புரத சத்து உணவை உண்பதும், சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் நடப்பதும் கல்லீரலுக்கு ஆரோக்கியம் தரும் என அறிவுறுத்துகின்றனர்.

error: Content is protected !!