News April 25, 2025
உறுதியான கலக்கல் காமெடி காம்போ..

சிம்பு ரசிகர்களுக்கு சந்தானம் குட் நியூஸ் ஒன்றை சொல்லியுள்ளார். பேட்டி ஒன்றில் ஒரு நாள் சிம்பு சார் எனக்கு போன் பண்ணி என்னுடைய படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டார். சிம்பு கேட்டால் முடியாது என்று சொல்ல முடியுமா?, அவர் கேட்டால் எப்போதும் சரி மட்டும் தான் என கூறியுள்ளார். இதன் மூலம் STR 49-ல் நடிப்பதை சந்தானம் உறுதி செய்துள்ளார். சிம்பு – சந்தானம் காம்போவில் உங்களுக்கு பிடித்தது?
Similar News
News November 30, 2025
சளியை கரைக்கும் சிம்பிள் கஷாயம்

சளி வாட்டி வதைக்கும் போது அதில் இருந்து வெளியேற, மாத்திரைகளை தேடி செல்வதே பலரின் வழக்கம். ஆனால் சிம்பிளான கஷாயம் மூலம் சளியை கரைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு 2 கிளாஸ் தண்ணீரில், கிராம்பு -3, மிளகு -3, சுக்குப் பொடி – கால் ஸ்பூன், மஞ்சள் பொடி – 2 சிட்டிகை, பிளாக் சால்ட் – 2 சிட்டிகை, நா.சர்க்கரை – 1 ஸ்பூன் ஆகியவை போட்டு கொதிக்கவிடுங்கள். அது 1 டம்ளராக சுட்டினால் கஷாயம் ரெடி.
News November 30, 2025
உங்களுக்கு செங்கல், எங்களுக்கு செங்கோல்: தமிழிசை

உதயநிதியை, தமிழிசை கடுமையாக விமர்சித்துள்ளார். உதயநிதிக்கு செங்கல் என்றால், எங்களுக்கு (பாஜக) செங்கோல் என ஆவேசமாக பேசியுள்ளார். 2026-ல் NDA கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, PM மோடியை அழைத்து வந்து, தமிழக சட்டப்பேரவையில் செங்கோலை நிறுவுவோம் என்றும் அவர் சூளுரைத்தார். அத்துடன், வரும் தேர்தலில் இரட்டை இலையுடன் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News November 30, 2025
வெற்றியை ருசிக்குமா இந்தியா? இன்று IND vs SA முதல் ODI

SA-க்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா இழந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், இன்று தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ODI தொடரை நிச்சயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்தியா உள்ளது. இதன் மூலம் இந்திய அணி பலமாகவே உள்ளது என்றும் நிரூபிக்க வேண்டியுள்ளது. முதல் ODI இன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. KL ராகுல் தலைமையிலான நீலப்படை வெற்றி பெறுமா?


