News February 16, 2025
காலையில் கண் விழித்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்…

காலையில் எழுந்தவுடன் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடாமல், மனதை அமைதியாக வைத்துக் கொண்டு இந்த ஸ்ரீலஷ்மி ஸ்லோகத்தை சொல்லுங்கள்.
கராக்ரே வஸதே லக்ஷ்மி கரமூலே ஸரஸ்வதீ
கரமத்யே து கோவிந்த, ப்ரபாதே கரதர்சனம்
கல்வி ஞானம் கிடைக்கக்கூடிய இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். புத்தியில் தெளிவும் ஞாபக சக்தியும் அதிகரித்து, தெளிவானவர்களாக, திடமானவர்களாகத் திகழ்வீர்கள் என்பது உறுதி.
Similar News
News March 5, 2026
மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

OPS திமுகவில் இணைந்ததால், அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவருடன் இருந்த பலரும் தற்போது அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். அந்த வகையில், அதிமுகவின் EX மா.செ., ஆக இருந்த முல்லை தயாளன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். EPS முன்னிலையில் அவர் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். தனது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருவது OPS தரப்புக்கு ஷாக் கொடுத்துள்ளது.
News March 5, 2026
கிறிஸ்டோபர் திலக் வங்கிக் கணக்கில் ₹13,000

காங்., ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் தனது வேட்புமனுவில் ஒரு சவரன் தங்க நகை, வங்கிக் கணக்கில் ₹13,000 மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவர் MP-ஆக தேர்வாகும் நிலையில், மிகவும் ஏழ்மையான MP என்ற பெருமையை பெறுவார். 2019-ல் MP ஆன ராஜஸ்தானின் சிகாரைச் சேர்ந்த 67 வயதான சுமேதா நந்த் சரஸ்வதி (₹34,311) நாட்டின் மிகவும் ஏழ்மையான MP என ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) அறிக்கை தெரிவிக்கிறது.
News March 5, 2026
ஒருநாளைக்கு 5 மணி நேரம் மட்டுமே பள்ளி..

பின்லாந்தின் கல்வி முறை உலகையே ஆச்சரியப்படுத்துகிறது. இங்கு மாணவர்கள் ஒரு நாளைக்கு 5 மணிநேரம் மட்டுமே பள்ளியில் செலவிடுகிறார்கள். ஒவ்வொரு பீரியடுக்கு பிறகு 15 நிமிட இடைவேளையும், சிறிய வீட்டுப்பாடமும் உண்டு. இந்த மன அழுத்தமில்லாத சூழல், குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் கற்றல் ஆர்வத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பின்லாந்து உலகளாவிய கல்வி மதிப்பீடுகளில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.


