News April 15, 2025

அடுத்தடுத்து நிலநடுக்கம்.. ஆசிய கண்டத்துக்கு ஆபத்தா?

image

மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் உயிரை குடித்தது. அத்தோடு நிற்கவில்லை. சீனா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், பிஜி தீவு என ஆசிய கண்டத்தில் இருக்கும் பல்வேறு நாடுகளில் அண்மை காலமாக நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை 4.39 மணியளவில் நேபாளத்திலும் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆசிய கண்டத்துக்கு என்னதான் ஆச்சு?

Similar News

News April 16, 2025

IPL: RR அணிக்கு 189 ரன்கள் இலக்கு

image

இன்றைய ஐபிஎல் போட்டியில் RR அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது DC அணி. டாஸ் வென்ற RR கேப்டன் சஞ்சு சாம்சன், DC அணியை பேட்டிங் செய்யப் பணித்தார். இதனையடுத்து, களமிறங்கிய DCயின் தொடக்க வீரர் பொரேல் அதிரடியாக விளையாடி 49 ரன்கள் குவித்தார். பின்னர், ராகுல், அக்‌சர் ஆகியோரின் அபார பேட்டிங்கால், DC அணி, 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது.

News April 16, 2025

உயிர் போனாலும் கைவிட மாட்டேன்: உத்தவ்

image

பாஜகவில் இருந்து பிரிந்தாலும், உயிர் போனாலும் இந்துத்துவாவை கைவிட மாட்டேன் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாஜகவின் சிதைந்து வரும் இந்துத்துவாவை தான் ஏற்கவில்லை எனவும், சிவசேனா இல்லாமல், பாஜகவால் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியிருக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். INDIA கூட்டணியில் உள்ள காங்., திமுக இந்துத்துவாவை எதிர்த்து வரும் நிலையில், தாக்கரே தொடர்ச்சியாக ஆதரித்து பேசிவருகிறார்.

News April 16, 2025

இந்தியாவில் அறிமுகமான ‘Dio 125’.. விலை தெரியுமா?

image

ஹோண்டா நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட Dio 125 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2 வேரியண்ட்களில் கிடைக்கும் இதன் விலை ₹96,749 மற்றும் ₹1.02 லட்சமாக (Ex- Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட இது ₹8,798 அதிகமாகும். LCD ஸ்க்ரீனுக்கு பதிலாக 4.2 இன்ச் TFT டிஸ்பிளே, ப்ளூடூத், நேவிகேசன், மொபைல் அழைப்பு, மெசேஜ் அலெர்ட், USB Type C சார்ஜிங் என பல வசதிகளை கொண்டுள்ளது.

error: Content is protected !!