News April 6, 2024

பெண்களுக்கு தனித்தொகுதி ஒதுக்க வேண்டும்

image

மக்களவைத் தோ்தலில் பெண்களுக்கு தனித்தொகுதி ஒதுக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். வடசென்னை பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “மக்கள்தொகை 30 கோடியாக இருக்கும் போது 543 மக்களவைத் தொகுதிகள் இருந்தன. தற்போது 130 கோடியை தொட்ட பின்பும், அதே 543 தொகுதிகள்தான் உள்ளன. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு தனித்தொகுதி இருப்பது போன்று பெண்களுக்கும் தனித்தொகுதி ஒதுக்கப்பட வேண்டும்” எனக் கூறினார்.

Similar News

News January 16, 2026

ஜன நாயகனுக்கு ஆதரவாக வைரமுத்து

image

சினிமாவை கலையாக பார்க்க வேண்டுமே தவிர அரசியலாக பார்க்க கூடாது என ஜன நாயகன் சென்சார் விவகாரம் குறித்து வைரமுத்து பேசியுள்ளார். தணிக்கை விதிகள் சூழ்நிலைக்கேற்ப மாற்றப்படுவதற்கு பதிலாக ஒரு நிரந்தரமான விதியை வகுத்தால் தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார். மேலும், 1952-ல் வெளியான பராசக்தி படத்தை மட்டுமே பார்த்துள்ளதாகவும், அது சிவாஜியும், கருணாநிதியும் TN-க்கு அளித்த கொடை எனவும் தெரிவித்துள்ளார்.

News January 16, 2026

வரலாறு படைக்கப்போகும் பாஜக

image

BMC தேர்தலில் பாஜக வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்யப்போகிறது. பாஜக 129, உத்தவ் – ராஜ் தாக்ரே சகோதரர்கள் கூட்டணி 72, அஜித் பவார் 2, காங்., 15 இடங்களில் முன்னிலையில் உள்ளன. பணக்கார நகரமான மும்பையில் 30 ஆண்டுகளாக இருந்த தாக்கரே குடும்பத்தின் ஆதிக்கமும் முடிவுக்கு வரவிருக்கிறது. இருப்பினும், உத்தவ் – ராஜ் மீண்டும் இணைந்தது, அக்கூட்டணிக்கு சற்று முன்னேற்றத்தை கொடுத்திருக்கிறது.

News January 16, 2026

விடுமுறை.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

image

தை அமாவாசையை முன்னிட்டு நாளை (ஜன.17) ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக TNSTC தெரிவித்துள்ளது. இதன்படி, நாளை சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கும், நாளை மறுநாள் ராமேஸ்வரம் – சென்னை இடையே சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவு தொடங்கியதும் <>TNSTC<<>> வெப் (அ) மொபைல் ஆப்பில் டிக்கெட்டை புக் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!