News March 27, 2025

பேரவையில் நிறைவேறிய தனித்தீர்மானம்!

image

வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக அரசு கொண்டு வந்த தனித்தீர்மானம் பேரவையில் நிறைவேறியது. முன்னதாக பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து CM ஸ்டாலின் உரையாற்றினார். இதற்கு அதிமுக, புரட்சி பாரதம், தவாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தனித்தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.

Similar News

News October 22, 2025

சற்றுமுன்: World சந்தையில் தங்கம் விலை கடும் சரிவு

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. இன்று(அக்.22) ஒரே நாளில் 1 அவுன்ஸ்(28g) 241 டாலர்கள் குறைந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ₹21,181 குறைந்துள்ளது. கடந்த 30 நாள்களில் 602 டாலர்கள் உயர்ந்த நிலையில், ஒரே அடியாக விலை சரிந்துள்ளதால், இது இந்திய சந்தையிலும் எதிரொலித்து தங்கம் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

News October 22, 2025

மழை காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

image

மழை காலம் வந்தாச்சு, கூடவே பல நோய்களும் வர வாய்ப்பிருக்கு. மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக, பாக்டீரியாக்கள் வேகமாக வளரும். இதனால், டெங்கு, டைபாய்டு, காய்ச்சல் தொற்று, சிக்குன்குனியா போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே சில விசயங்களை சாப்பிடாமல் இருப்பது சாலச்சிறந்தது. அது என்னென்ன உணவுகள் என்பதை தெரிந்துகொள்ள SWIPE பண்ணுங்க. எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க SHARE பண்ணுங்க.

News October 22, 2025

சினிமா மூலமே ஜனநாயகனாகி விட முடியாது: கி.வீரமணி

image

நடிகரின் அரிதாரம், பெரியார் படத்திற்கு மாலை ஆகியவை வெறும் காட்சிகள் தான், அரசியலில் சாதிக்கலாம் என்பது பகற்கனவே என்று விஜய்யை கி.வீரமணி மறைமுகமாக சாடியுள்ளார். சினிமா கவர்ச்சி, பல கோடி ரூபாய் பணம் ஆகியவற்றின் மூலம் உண்மையான ஜனநாயகனாக முடியாது என்றும் விமர்சித்துள்ளார். பிறரிடம் சரணடையாமல் புரிந்துகொண்டு, திருத்திக்கொண்டு அக்கட்சியினர் (தவெக) அரசியல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!