News April 16, 2024

மோடி, அமித்ஷாவுக்கு மட்டும் தனி சட்டமா?

image

எதிர்க்கட்சி தலைவர்கள் செல்லும் ஹெலிகாப்டரில் மட்டும் அதிகாரிகள் சோதனை நடத்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி இந்தியா முழுவதும் தேர்தல் பரப்புரைக்கு செல்கிறார். ஆனால், இதுவரை ஒரு முறை கூட அவரின் வாகனத்திலோ அல்லது அமித்ஷாவின் வாகனத்திலோ எவ்வித சோதனையும் நடைபெறவில்லை. அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News November 7, 2025

இன்று 9.50 மணிக்கு ‘வந்தே மாதரம்’ பாடுங்க: மத்திய அரசு

image

தேச உணர்வூட்டும் வந்தே மாதரம் பாடலை இன்று காலை 9.50 மணி அளவில் பொதுமக்கள் பாட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 1875-ல் வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலில் இப்பாடல் இடம்பெற்றது. இன்று, அதன் 150-வது ஆண்டை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தை PM மோடி வெளியிடுகிறார்.

News November 7, 2025

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயின் நன்மைகள்!

image

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பல வித உடல்நல பிரச்னைகளுக்கு இது சுவையான தீர்வாக அமையும் என்றும் கூறப்படுகிறது. இதை சாப்பிட்டால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை போட்டோக்களாக கொடுத்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.

News November 7, 2025

அன்புமணி புதிய கட்சி தொடங்கலாம்: ராமதாஸ்

image

பாமக பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி பக்கம் உள்ள கும்பலில் 21 பேர் இருப்பதால், அதை பயன்படுத்தி அவர் புதிய கட்சி தொடங்கி கொள்ளட்டும் என்று ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார். அக்கட்சிக்கு பொருத்தமான பெயரை தானே சொல்வதாகவும், ஆனால் அன்புமணிக்கு பாமகவுடனும், தன்னுடனும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், ராமதாஸ் கூறியுள்ளார்.

error: Content is protected !!