News March 17, 2024
கேட், வில்லியம் தம்பதியர் இடையே விரிசல்?

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேட் தம்பதியிடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாடல் அழகி ஹேன்பரியுடன் வில்லியமுக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும், பிறகு வேறு ஒருவரை ஹேன்பரி திருமணம் செய்து கொண்டதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின. 3 பிள்ளைகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்ட கேட், இளவரசருடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. இதை வைத்து, விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது.
Similar News
News February 2, 2026
அரசியல் யுத்தத்தை கிளப்பிய ‘Four Stars of Destiny’

முன்னாள் ராணுவ ஜெனரல் நரவனேவின் சுயசரிதையான ’Four Stars of Destiny’ என்ற புத்தகம், தற்போது மோடி – ராகுல் ஆகியோரின் அரசியல் யுத்தத்துக்கான காரணமாக மாறியுள்ளது. இந்நிலையில், விற்பனைக்கு வரத் தயாராக இருந்த அப்புத்தகம் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆய்வுக்கு பிறகு முடக்கப்பட்டது ஏன் என்றும், சீன ஆக்கிரமிப்பு குறித்து பாஜக அரசு பயப்பட அதில் என்ன இருக்கிறது எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
News February 2, 2026
நடிகை என்பதால் காதலன் பிரிந்து சென்றார்: மிருணாள்

தனது முன்னாள் காதலன் தான் ஒரு நடிகை என்பதால் தன்னை பிரிந்து சென்றதாக மிருணாள் தாக்கூர் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், நீ மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவள், உன்னை கையாள்வது கடினம் என கூறி காதலன் பிரிந்து சென்றார் எனக் குறிப்பிட்டார். மேலும், அந்த உறவு முடிவுக்கு வந்தது நல்லது எனவும், இல்லையெனில் எதிர்காலத்தில் தனக்கு பிரச்னைகள் ஏற்பட்டிருக்கும் எனவும் கூறினார்.
News February 2, 2026
கணவரின் ஆணுறுப்பை அறுத்த மனைவி

67 வயது கணவரின் ஆணுறுப்பை மனைவி அறுத்துக் கொலை செய்த சம்பவம் ஸ்பெயினை அதிர வைத்துள்ளது. கழுத்தில் கத்தியால் பலமுறை குத்தப்பட்டும், ஆணுறுப்பு அறுக்கப்பட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட உடலை போலீஸ் கைப்பற்றியுள்ளது. கைதான பெண்மணி குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டார்; ஆனால் கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


