News March 19, 2024
ஓய்வை திரும்பப் பெற்ற கிரிக்கெட் வீரர்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தனது ஓய்வை திரும்பப் பெற்றுள்ளார். முன்னதாக அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமீபத்தில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் பரிந்துரையை ஏற்று தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளார். இதையடுத்து வரும் 22ஆம் தேதி நடைபெறும் வங்க தேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
சவுதி பஸ் விபத்து அதிர்ச்சி அளிக்கிறது: ஜெய்சங்கர்

சவுதி அரேபியாவில் நடந்த <<18308684>>பஸ் விபத்தில்<<>> 42 இந்தியர்கள் இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக EAM ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரியாத் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
சற்றுமுன் சந்திப்பு: அதிமுக கூட்டணியில் தேமுதிக?

மதுரையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் சந்தித்து பேசி வருகிறார். அவருடன் தென் மாவட்ட அதிமுக முக்கியத் தலைவர்களும் இருக்கின்றனர். ஜனவரி மாதம் கடலூர் மாநாட்டில் அல்லது அதற்கு முன்னதாக கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று பிரேமலதா கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
News November 17, 2025
மதுரை: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி..!

மதுரை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு <


