News April 26, 2024
1 ரன் கூட கொடுக்காமல் 7 விக்கெட் வீழ்த்தி சாதனை

மங்கோலியாவுக்கு எதிரான மகளிர் T20 போட்டியில், 1 ரன் கூட கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தோனேசிய வீராங்கனை புதிய சாதனை படைத்துள்ளார். அபாரமாக பந்துவீசிய இந்தோனேசிய வீராங்கனை ரோமாலியா, 4 ஓவர்களில் 3 மெய்டன் & 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் மங்கோலியா அணி 24 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சர்வதேச T20 கிரிக்கெட்டில், இதுவரை எந்தவொரு (ஆண்/பெண்) பவுலரும் இந்த சாதனையை படைத்ததில்லை.
Similar News
News January 24, 2026
பள்ளிகள் கட்டண திருத்த மசோதா நிறைவேற்றம்

தமிழக பேரவையில் இன்று 5 முக்கிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தமிழ்நாடு நீர்வளங்கள், தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்தம், வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்தல், பிச்சை எடுப்பதை தடுத்தல், பள்ளிகள் கட்டண திருத்தம் ஆகிய 5 மசோதாக்களை துறை சார்ந்த அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். அதிமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில் மேற்கண்ட மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பட்டுள்ளன.
News January 24, 2026
பாகிஸ்தான் பனிச்சரிவில் ஒரு குடும்பமே அழிந்தது

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவில் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைபர் பக்துன்வா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பச்சா கான், அவரது மனைவி, 3 மகன்கள், 2 மகள்கள் & 2 மருமகள்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் சுவாச பிரச்னைகளால் அவதிப்படுவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
News January 24, 2026
தமிழில் தெரியாத ஒரே வார்த்தை ’பயம்’: சீமான்

வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுபவன்தான் வீரன் என சீமான் கூறியுள்ளார். வெற்றியடைந்தால் இருப்பேன் தோல்வியடைந்தால் சென்றுவிடுவேன் என்பவன் கோழை என்று பேசிய அவர், தங்களுக்கு தெரியாத மூன்றெழுத்து ’பயம்’ என பேசியுள்ளார். மேலும், தங்கள் பரம்பரைக்கே தெரிந்த மூன்றெழுத்து ’வீரம்’ எனவும் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க..


