News December 5, 2024
வரலாறு காணாத உயர்வு.. ஒரு பிட்காயின் எவ்வளவு?

பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இன்று காலை வர்த்தக நிலவரப்படி ஒரு காயின் $100,000க்கு விற்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ஒரு பிட்காயின் 85 லட்சமாக உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு பிட்காயின் மதிப்பு 40% உயர்ந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிட்காயின் மதிப்பு $1000ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 29, 2025
அவையை அமளியாக்கிய ‘ஊர்ந்து’.. CM விளக்கம்!

காவல்துறை மானிய கோரிக்கைக்கு CM அளித்த பதிலுரையில் இடம்பெற்ற ‘ஊர்ந்து’ என்ற சொல்லை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு பதிலளித்த CM ஸ்டாலின், ஊர்ந்தோ தவழ்ந்தோ என, தான் யாரையும் குறிப்பிடவில்லை என விளக்கம் அளித்தார். முன்னதாக, CM ஸ்டாலின் பதிலுரையை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் புறக்கணித்தார்.
News April 29, 2025
ஆபாசப் படங்கள் தடை…ட்ரம்ப் மனைவி ஆதரவு

பழிவாங்கும் நோக்கத்துடன் பதிவேற்றப்படும் ஆபாசப் படங்களுக்கு தடைவிதிக்கும் மசோதாவை நிறைவேற்றுவதில் ட்ரம்ப் உறுதியாக உள்ளார். மசோதாவை, USA காங்கிரஸ் நிறைவேற்றி அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இது சட்டமானால், குழந்தைகளின் தனியுரிமை பாதுகாக்கப்படும் என்பதால் ட்ரம்ப் மனைவி மெலானியா ஆதரவளித்துள்ளார். தேநேரம், கருத்துரிமைக்கு எதிரானதாக இது மாறிவிடக்கூடாது என விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
News April 29, 2025
BREAKING: காலனி என்ற சொல் நீக்கம்: CM ஸ்டாலின்

காலனி என்ற சொல் அரசு ஆவணங்கள் மற்றும் பொதுப் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும் என்றார்.