News April 18, 2024

சாதனைகள் படைத்த டெல்லி

image

GT-க்கு எதிரான 32ஆவது லீக் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற DC அணி பல சாதனை பட்டியல்களில் இடம்பிடித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- 1. குறைந்த பட்ச ஸ்கோரில் (89 ரன்கள்) எதிரணியை வீழ்த்திய அணிகளின் வரிசையில் முதலிடம். 2. 17ஆவது சீசனில் பவர் பிளே ஓவரில் அதிக விக்கெட் சாய்த்த அணிகளின் வரிசையில் முதலிடம் (13). 3. குறைந்த ஓவர்களில் 90+ சேஸிங் செய்த அணிகளில் 3ஆவது இடம்.

Similar News

News November 15, 2025

‘அம்மா நான் சாகப் போறேன்.. நீங்க சந்தோஷமா இருங்க’

image

‘அண்ணா இப்போது நீ மகிழ்ச்சியாக இருப்பாய் அல்லவா, நன்றாக படி. நான் இந்த வாழ்வில் சோர்வடைந்துவிட்டேன். அம்மா, நான் போகிறேன். அம்மா, அப்பா சந்தோஷமாய் இருங்க’. குஜராத்தில் தற்கொலை செய்துகொண்ட 6-ம் வகுப்பு மாணவியின் உருக்கமான கடைசி வரிகள் இவை. வீட்டில் தூக்கிட்ட மகளின் உடலை பார்த்து தாய் கதறி அழுதது பெரும் சோகம். சிறுமியின் இந்த சோக முடிவுக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. SO SAD.

News November 15, 2025

வெறும் ₹6-க்கு 2 நாள்களுக்கு 1GB/டே.. அரசின் PM WANI திட்டம்!

image

இணையவசதி என்பது அத்தியாவசிய தேவையாக மாறியுள்ள நிலையில், நாட்டின் அனைத்து மக்களும் இணையவசதி பெற, PM WANI என்ற திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. சிறு கடைகளையும் மக்கள் பயன்பெறும் வகையில் Wi-Fi Hub-ஆக மாற்றுவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. வெறும் ₹6-க்கு 2 நாள்களுக்கு 150 Mbps வேகத்தில் 1GB/ day வழங்கப்படுகிறது. PM WANI ஆப்பை டவுன்லோட் செய்து எளிதில், இந்த திட்டத்தில் சேரலாம்.

News November 15, 2025

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. இன்று முதல் அறிவிப்பு

image

பொங்கல் பரிசு வழங்கும் பணியை தமிழக அரசு இப்போதே தொடங்கிவிட்டது. நவ.15 முதல்(இன்று) ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்தார். இதனையடுத்து, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலைகளை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கத் தொடங்கியுள்ளனர். மேலும், பச்சரிசி, வெல்லம், கரும்பு, பரிசுத் தொகை உள்ளிட்டவை குறித்தும் அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.

error: Content is protected !!