News April 3, 2025
ஆ.ராசா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக

இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதற்கு ஆ.ராசா பகிரங்க மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தியுள்ளது. திமுக வேட்டி கட்டிக் கொண்டு பொட்டு வைக்க வேண்டாம் என ஆ.ராசா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்துள்ள TN பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், ஆ.ராசா அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமாக பேசியிருப்பதாக சாடியுள்ளார். இதற்காக ஆ.ராசா வருத்தம் தெரிவிக்க அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 8, 2025
பெண்களுக்கு மின்சார ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன்: அரசு

பொருளாதாரத்தில் பின்தங்கிய 1,000 மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக ரூ.3 லட்சம் கடன் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மானியக் கோரிக்கை மீது பதில் தாக்கல் செய்துள்ளார். அதில், நிலமற்ற ஏழை பெண் விவசாய தொழிலாளர்கள் 2 ஏக்கர் நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
News April 8, 2025
சொந்த நாட்டு மக்களுக்கே ஆப்பு வைத்த டிரம்ப்?

டிரம்பின் வரி உயர்வு அறிவிப்பு அவருக்கே பேக் ஃபயர் ஆகும் என JPMorgan Chase & Co நிறுவனத்தின் CEO ஜேமி டிமோன் எச்சரித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் இறக்குமதி, உள்ளூர் பொருள்களின் விலை உயர்ந்து, பணவீக்கம் அதிகரிக்கும் எனவும், நிறுவனங்களையும், மக்களையும் நேரடியாக பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வளர்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியாவுடன் நட்புறவை பேணவும் அறிவுறுத்தியுள்ளார்.
News April 8, 2025
சித்திரை திருவிழாவுக்கு ரெடியா?

மதுரையில் வெகு பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா மே 8-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் உச்சமான, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு மே 12-ம் தேதி நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம், தமிழகம் முழுவதிலும் உள்ள பக்தர்கள் வைகை ஆற்றங்கரையில் கூடி நின்று அழகரை வழிபடுவர்.