News April 4, 2024
முன்னாள் சபாநாயகர் அலுவலகத்தில் சோதனை

தமிழ்நாட்டின் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. திமுகவின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் ஆவுடையப்பன். அவரது அலுவலகத்தில் பணப் பட்டுவாடா நடப்பதாக கிடைத்த புகாரின் பேரில் சோதனை நடைபெற்று வருகிறது.
Similar News
News January 14, 2026
இளவரசி TO ராணி: 20 வயதில் சாதனை!

ஸ்பெயினில் 150 ஆண்டுகளில் முதல்முறையாக 20 வயது இளவரசி லியானோர், ராணியாக பொறுப்பேற்று வரலாறு படைக்கவுள்ளார். 1868-ல் ஆட்சி செய்த 2-ம் இசெபல்லாவிற்கு பிறகு, அரியணையேறும் முதல் பெண் இவரே. அந்நாட்டு சட்டப்படி ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்றிலும் தீவிர பயிற்சி பெற்ற இவர், தனியாக விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார். பல மொழிகளை சரளமாக பேசும் இவர், ஸ்பெயினின் வலிமையான ராணியாக தயாராகிவிட்டார்!
News January 14, 2026
தித்திக்கும் சர்க்கரை பொங்கல் ரெசிபி!

◆தேவையானவை: பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், ஏலக்காய் தூள், நெய், முந்திரி, திராட்சை ◆செய்முறை: அரிசி, பாசிப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் 4 கப் தண்ணீரில் அரிசியை வேகவிடவும். வெல்லத்தை கரைத்து, அரிசியுடன் சேர்த்து கிளறவும். பிறகு, ஏலக்காய் தூள் & நெய் சேர்த்து மிதமான தீயில் கிளறி விடவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறினால், சர்க்கரை பொங்கல் ரெடி!
News January 14, 2026
BREAKING: விஜய்யை அழைத்த அண்ணாமலை

விஜய், NDA கூட்டணிக்கு வர வேண்டும் என அண்ணாமலை பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், விஜய்யை சாதாரணமாக எடை போடக் கூடாது; அவருக்கு தனியாக மாஸ் உள்ளது என்றார். ஆனாலும், TN-ல் இருமுனை போட்டி(அதிமுக Vs திமுக) நிலவுவதால் திமுகவுக்கு மாற்று வேண்டும் என நினைக்கும் விஜய் தங்களுடன் இணைய வேண்டும் எனவும், அது வெற்றிக்கான கெமிஸ்ட்ரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?


