News March 16, 2025
மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் டிஸ்சார்ஜ்

திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். முதலில் நெஞ்சு வலி என தகவல் பரவிய நிலையில், நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ரகுமானின் மகன் அமீன் விளக்கமளித்துள்ளார். வழக்கமான பரிசோதனைகள் முடிந்த பின் அவர் வீடு திரும்பினார்.
Similar News
News July 10, 2025
டிரம்ப் வரி விதிப்பு பட்டியல்.. இந்தியாவின் பெயர் இல்லை

கூடுதல் வரி விதிக்கப் போவதாக கூறி டிரம்ப் வெளியிட்டுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை. அதில், 20 நாடுகளின் பெயர்கள் உள்ளன. அதாவது, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம், இந்தோனேசியா, தெ.ஆப்பிரிக்கா, போஸ்னியா, கம்போடியா, கஜகஸ்தான், லாவோஸ், ஹெர்சிகோவினா, செர்பியா, துனிசியா உள்ளிட்ட நாடுகளின் பெயர்கள் உள்ளன. இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தக உடன்பாடு செய்யவுள்ளது.
News July 10, 2025
மகிழ்ச்சிக்கு 5 நிமிடங்கள்

தினசரி 5 நிமிடங்கள் ஒதுக்கி இப்பழக்கங்களை கடைப்பிடியுங்கள்: *1 நிமிடம் நிதானமாக சுவாசியுங்கள். அமைதி ஆற்றலை உள்ளிழுத்து, அன்பை வெளியிடுங்கள் *கிடைத்துள்ள ஆசிர்வாதங்களுக்காக நன்றி கூறுங்கள் *நாளை நன்றாகவே இருக்கும் என்று `ஆல் இஸ் வெல்’ சொல்லுங்கள் *கடந்தகால கசப்புகளை போக விடுங்கள், நாளை நமதே *நீங்கள் காணும் ஒவ்வொருவரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்.
News July 10, 2025
2047-க்குள் இந்திய அரசியலில் காங்கிரஸ் இருக்காது: பாஜக

2047-ம் ஆண்டுக்குள் இந்திய அரசியலில் இருந்து காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் துடைத்தெறியப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது. மீரட்டில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், உ.பி. துணை முதல்வருமான கேசவ் பிரசாத் மெளரியா, பகுஜன் சமாஜ் கட்சியும் இந்திய அரசியலில் இருந்து துடைத்தெறியப்படும் என்றார். 2027 உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.