News April 15, 2025
தரமான சம்பவம்.. ஸ்ரேயஸை தேடி வந்த ஐசிசி விருது..!

மார்ச் மாதத்திற்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஷ்ரேயஸ் ஐயர் வென்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் (243 ரன்கள் ) சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் இந்த மாதத்திற்கான விருதை வென்று அசத்தியுள்ளார். பிப். மாதத்திற்கான விருதும் இந்தியரான சுப்மன் கில்லுக்கு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 27, 2025
சற்றுமுன்: விலை மொத்தம் ₹9,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹180-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 உயர்ந்து ₹1,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த மூன்று நாள்களில் மட்டும் வெள்ளி விலை மொத்தம் ₹9,000 அதிகரித்துள்ளது.
News November 27, 2025
ஆஸ்கர் போட்டியில் ‘மகாவதார் நரசிம்மா’

இந்தியாவில் பெரும் வெற்றிபெற்ற அனிமேஷன் படமான ‘மகாவதார் நரசிம்மா’ ஆஸ்கர் போட்டியில் களமிறங்கி, உலகளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஆஸ்கரின் அனிமேஷன் பிரிவில் தகுதிபெற்ற 35 படங்களில் ஒன்றாக இது இடம்பெற்றுள்ளது. ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் முதல் அனிமேஷ் படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. Zootopia 2, Demon Slayer: Infinity Castle உள்ளிட்ட சர்வதேச படங்களுடன் இது போட்டியிடுகிறது.
News November 27, 2025
ராமதாஸ் கையில் அதிகாரங்கள்: ஸ்ரீகாந்தி

பாமக இரண்டாக பிரிந்து கிடப்பதால், இதுவரை கூட்டணியை உறுதி செய்ய முடியவில்லை. இதற்கிடையில், பாமகவின் அனைத்து அதிகாரங்களும் தனக்குதான் இருப்பதாக அன்புமணி கூறி வருகிறார். இந்நிலையில், அன்புமணிக்கு எதிராக அரசியல் களத்தில் குதித்துள்ள ஸ்ரீகாந்தி, பாமக பெயர், சின்னம் உள்ளிட்ட அனைத்தும் நிறுவனர் ராமதாஸிடம்தான் உள்ளது. விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.


