News April 2, 2024
அதிக வாக்குகள் பெற்றுத்தருவோருக்கு பரிசு

திருச்சி மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு அதிக வாக்குகள் பெற்றுத் தரும் அதிமுக நகர செயலாளருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ப.கருப்பையாவை ஆதரித்து பேசிய அவர், ‘தேர்தலில் திருச்சி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத்தரும் வட்டச் செயலாளருக்கு 5 சவரன் தங்கச் சங்கிலி பரிசளிக்கப்படும்’ என்றார்.
Similar News
News November 10, 2025
மோடியும், அமித்ஷாவும் வாக்கு திருட்டில் சிக்குவார்கள்: ராகுல்

மோடியும், அமித் ஷாவும் ஒருபோதும் நியாமான முறையில் தேர்தலில் வெற்றி பெற்றது இல்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். EC ஆணையருக்கும் வாக்கு திருட்டில் தொடர்புள்ளதாகவும், மோடியும், அமித்ஷாவும் வாக்கு திருட்டு விவகாரத்தில் இருந்து தப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பல மாநிலத்தில் வாக்குதிருட்டின் மூலம் வெற்றிபெற்ற பாஜக, பிஹாரிலும் அதேபோன்று வெற்றி பெற்றுவிடலாம் என நினைப்பதாக கூறினார்.
News November 10, 2025
வெள்ளை முடி இருக்கா? அப்போ நல்லது தான்!

தலைமுடி நரைப்பதும் ஒருவகையில் நல்லது என்கின்றனர் ஜப்பானிய விஞ்ஞானிகள். கேன்சரை உண்டாக்கும் செல்களை உடல் அழிக்கும் செயல்முறையில், முடி நிறம் இழப்பதாக கூறுகின்றனர். மெலனோசைட்கள் என்ற செல்கள் தான், நம் தலைமுடி கருநிறமாக இருப்பதற்கு காரணம். கேன்சரை ஏற்படுத்தும் செல்களை அழிக்கும் செயல்பாட்டின் போது, இவை தங்களை தாங்களே அழித்துக் கொள்வதால், முடி நிறம் இழக்கிறதாம். ஆகவே, கிரே ஹேர் பார்த்து கவலைபடாதீங்க.
News November 10, 2025
திமுக ஆட்சிக்கு முடிவுகட்டும் நடைபயணம்: அன்புமணி

திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் என தனது நடைபயணத்தின் 100-வது நாள் விழாவில் அன்புமணி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே இந்த மக்கள் சந்திப்பின் நோக்கம் என்றார். பல தடைகளை தாண்டி இந்த பயணத்தை மேற்கொண்டதாகவும், இதில் பல மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


