News April 24, 2024
இழிவான அரசியல் செய்யும் பிரதமர்

சுதந்திர இந்தியாவில் இவ்வளவு இழிவான அரசியல் செய்யும் மோடியைப் போன்ற ஒரு பிரதமரை யாரும் கண்டதில்லை என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இஸ்லாமியர்கள் குறித்த பிரதமரின் பேச்சு கண்டனத்துக்குரியது. இரு மதத்தினரிடையே பிளவை ஏற்படுத்தி அரசியல் பிழைப்பு நடத்தப் பார்க்கும் பாஜகவுக்கு ஜூன் 4ஆம் தேதி மக்கள் முடிவுகட்டுவார்கள் எனக் கூறினார்.
Similar News
News January 3, 2026
T20 WC: தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

டி20 WC-க்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்ரம் தலைமையிலான அணியில் போஸ்ச், பிரேவிஸ், டி காக், டி ஜோர்ஜி, டோனோவன், யான்சென், லிண்டே, கேஷவ் மகாராஜ், மபாகா, மில்லர், இங்கிடி, நார்ட்ஜே, ரபாடா, ஜேசன் ஸ்மித் ஆகியோர் உள்ளனர். அதிரடி வீரர்கள் ரிக்கல்டன், ஸ்டப்ஸ் இடம்பெறாதது பேசுபொருளாகியுள்ளது. 2024 WC ஃபைனலில் இந்தியாவிடம் நூலிழையில் தோற்ற SA, இம்முறை சாம்பியனாகும் முனைப்பில் உள்ளது.
News January 3, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 569
▶குறள்:
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
▶பொருள்: நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்
News January 3, 2026
விஜய்க்கு தான் கெடுதல்: தமிழிசை

NDA கூட்டணியில் விஜய் சேர வேண்டுமென மீண்டும் ஒருமுறை தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார். அனுமானங்களின் அடிப்படையிலேயே விஜய் பலமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அனுபவம், ஆட்சியின் அடிப்படையில் பலமாக இருக்கும் தங்களுடன்(NDA கூட்டணி) விஜய் சேர்ந்தால் நல்லது என்றும், இல்லையெனில் அது அவருக்கு தான் கெடுதல் எனவும் தமிழிசை கூறியுள்ளார். விஜய் வராவிட்டாலும் தங்களுக்கு பிரச்னையில்லை என அவர் குறிப்பிட்டார்.


