News April 29, 2024
மக்களை குழப்பும் பிரதமர்

மக்களை குழப்பும் வகையிலேயே பிரதமர் மோடியின் கருத்துக்கள் உள்ளதாக காங்., வேட்பாளர் சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார். பெண்களின் தாலியை இஸ்லாமியர்களுக்கு காங்., கொடுக்கும் என அபாண்டமான குற்றச்சாட்டை, கண்ணை மூடிக்கொண்டு பிரதமர் பேசுகிறார் என்று குற்றம் சாட்டிய அவர், இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானவர்கள் ஆர்எஸ்எஸ், பாஜகவினர். அவர்கள் நாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகின்றனர் என சாடினார்.
Similar News
News January 27, 2026
மகளிர் உரிமைத் தொகை ₹2,500.. புதிய தகவல்

தேர்தல் நெருங்குவதால், மகளிர் வாக்குகளை பெற திமுக, அதிமுக முனைப்பு காட்டுகின்றன. அதிமுக ஆட்சிக்கு வந்தால் குலவிளக்கு திட்டத்தில் மகளிருக்கு ₹2,000 வழங்கப்படும் என EPS அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்து CM ஸ்டாலின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று தஞ்சையில் பேசிய ஸ்டாலின், <<18967001>>தேர்தலில் பெண்களை நம்பியே இருக்கிறேன்<<>> என கூறியிருந்தார்.
News January 27, 2026
திமுக கூட்டணி மண்ணைக் கவ்வும்: அன்புமணி

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகத்திற்கு தேடித் தந்ததே திமுகவின் சாதனை என அன்புமணி சாடியுள்ளார். தனது அறிக்கையில், அண்ணா பல்கலை., மாணவி விவகாரம் உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு கணக்கு தீர்க்க மக்கள் தயாராக உள்ளதாகவும், தேர்தலில் DMK கூட்டணி மண்ணைக் கவ்வும் என்றும் கூறியுள்ளார்.
News January 27, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை .. கலெக்டர் அறிவித்தார்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்ய பிப்.7-ம் தேதி (சனிக்கிழமை) பணிநாளாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


