News August 26, 2024
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டக புத்தகம்

நெல்லை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் மெல்ல கற்கும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி கட்டகம் என்ற புத்தகம் தயாரிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. அனுபவம் மிக்க ஆசிரியர்கள் இந்த பயிற்சி கட்டக புத்தகங்களை தயாரித்துள்ளனர். இவை விரைவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி கூடுதல் மதிப்பெண் எடுப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கல்வி துறையினர் தெரிவித்தனர்.
Similar News
News December 2, 2025
நெல்லை: அரசு பஸ் மோதி பெண் உயிரிழப்பு

நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது 47). இவரது மனைவி சந்திரா (42). இவர்கள் மீனாட்சிபுரத்தில் டிபன் சென்டர் நடத்தி வருகின்றனர். நேற்று பிற்பகல் சமாதானபுரம் பகுதியில் மொபட்டில் சென்ற போது பின்னால் வந்த அரசு பஸ் மோதியது. இதில் சந்திரா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். சுப்பையா லேசான காயத்துடன் தப்பினார். விபத்துக்குறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News December 2, 2025
நெல்லை: ஆதார் குறித்து மத்திய அரசு முக்கிய அப்டேட்!

நெல்லை மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்கும் வழியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கு. இந்த <
News December 2, 2025
நெல்லை: 80 லட்சம் பண மோசடி!

நெல்லை, அம்பாசமுத்திரத்தை சேர்ந்த மென் பொறியாளரிடம் இணையவழி முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ரூ. 80 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளம் மூலம் வாட்ஸ்ஆப் குழுவில் இணைக்கப்பட்டு, இரண்டு மாதங்களில் பணத்தை இழந்தார். முதலீட்டை திரும்பப் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டதால், அவர் திருநெல்வேலி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


