News February 15, 2025
மனைவி சாம்பலில் மண்பானை: சிலிர்க்க வைக்கும் காதல்

உயிரிழந்த மனைவியின் நினைவுகளுக்கு வடிவம் கொடுத்திருக்கிறார் சீனக் கணவர் பியோ. இவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் உயிரிழந்தார். அவரது கடைசி ஆசையின்படி சாம்பலை களிமண்ணில் கலந்து மண்பானையாக வடிவமைத்துள்ளார் பியோ. தான் இறந்ததும், அதில் தனது உடைமைகளை வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என வாரிசுகளிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். காதல் என்றும் அழியாது!
Similar News
News December 13, 2025
சற்றுமுன்: கூட்டணி முடிவை அறிவித்தார் பிரேமலதா

அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் தோழமையாக உள்ளன. ஆனால், கூட்டணி என கூற முடியாது என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகள், வேட்பாளர்கள் யார் என்ற முழு விவரமும் ஜன.9-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரின் இந்த பேச்சின் மூலம் கடைசி நேரத்தில் கூட கூட்டணி கணக்கு மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
News December 13, 2025
பாஜகவுக்கு சதி திட்டம் தீட்டிக் கொடுப்பதே திமுக தான்: சீமான்

திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு பாஜக, திமுகவே காரணம் என சீமான் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், பாஜகவுக்கு சதி திட்டம் தீட்டிக் கொடுப்பதே திமுக தான் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கருணாநிதிக்கு ஏன் விழா எடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், பாரதிக்கு விழா எடுக்க வேண்டியது தானே என்றும் கேட்டுள்ளார். மேலும், பாஜக வளர்ந்ததற்கு காரணமே கருணாநிதி தான் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
News December 13, 2025
சிகரெட்டை விட இது ரொம்ப டேஞ்சர்.. உடனே கவனியுங்க!

உடல் பருமனாக இருப்பதால், 13 வகையான புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மார்பகம், பெருங்குடல், எண்டோமெட்ரியம் (கருப்பையின் உட்புற திசு), உணவுக்குழாய், பித்தப்பை, இரைப்பை, சிறுநீரகம், கல்லீரல், கருப்பை, கணைய, தைராய்டு, எலும்பு மஜ்ஜை & மூளையில் உள்ள மெனிஞ்சியோமா ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படலாம் என்கின்றனர். எனவே, உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வெச்சிக்கோங்க!


