News August 2, 2024
ஏ பிளஸ் ரவுடி குடும்பத்துடன் கைது

பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, சென்னையின் பிரபல ஏ பிளஸ் பிரிவு ரவுடி தேவா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். தேவாவின் தந்தை சேகர், அண்ணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News December 5, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. தகுதியுடையோர் விண்ணப்பத்தினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு டிச.18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 5, 2025
Business 360°: டீசல் பயன்பாடு பன்மடங்கு அதிகரிப்பு

*கடந்த ஏப். முதல் அக். வரை ₹329 கோடிக்கு சீனாவுக்கு இந்தியாவில் இருந்து தேயிலை ஏற்றுமதியாகியுள்ளது *2025-26 நிதியாண்டின் இறுதியில் இந்தியாவின் GDP 7.4% ஆக உயரும் என அமெரிக்க நிறுவனம் கணிப்பு *கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு, நவம்பரில் 85.5 லட்சம் டன் டீசல் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது *இந்தியா-ரஷ்யா வர்த்தகத்தை சமநிலைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என பியூஸ் கோயல் உறுதி
News December 5, 2025
Sports 360°: டேக்வாண்டோவில் இந்தியாவுக்கு வெண்கலம்

*SUPER CUP கால்பந்து இறுதிப்போட்டிக்கு எப்.சி.கோவா, ஈஸ்ட் பெங்கால் எப்.சி அணிகள் முன்னேற்றம் * ILT20-ல் MI எமிரேட்ஸை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் வீழ்த்தியது *U-21 டேக்வாண்டோ உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிதேஷ் சிங் பிஸ்ட் வெண்கலம் வென்றார் *HCL ஸ்குவாஷ் தொடரின் ஃபைனலில் அனாஹத் சிங்-ஜோஷ்னா சின்னப்பா மோதல் *டி20 போட்டிகளில் சுனில் நரேன் 600-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்


