News August 15, 2024
பாண்டியாவை பார்த்து உத்வேகம் அடைந்த வீரர்

ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகளை பார்த்து உத்வேகம் அடைந்ததாக இந்திய ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங் தெரிவித்துள்ளார். முக்கியமான போட்டிகளில் பாண்டியாவின் சிறப்பான செயல்பாடு தனக்கு ஊக்கம் அளிப்பதாகவும், கடந்த 4-5 ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியா வெண்கலம் வெல்ல ஹர்திக் சிங்கின் பங்களிப்பு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 22, 2025
பொங்கல் பரிசாக ₹5,000 கொடுங்க: EPS கூறும் காரணம்

திமுக, மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதால் மக்கள் மனம் குளிர, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ₹5,000 வழங்க வேண்டும் என EPS கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் இருந்த போது நாங்கள் ₹2,500 வழங்கினோம். அப்போது எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின், ஏன் ₹5,000 வழங்கக்கூடாது என கேள்வி எழுப்பினார். அதே கோரிக்கையை இப்போது நாங்கள் வைக்கிறோம் என்றார்.
News December 22, 2025
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

20 நாள்களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலையின் மேல் பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலையின் மேல் செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. ஆனாலும், தீபத்தூண் விவகாரம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் மலைக்கு செல்லும் பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
News December 22, 2025
2026 தேர்தலில் இருந்து விலகுகிறேன்: நடிகர் அறிவிப்பு

2026 தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சரத்குமார் அறிவித்துள்ளார். தனது கட்சியை (சமக) கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த சரத், விருதுநகரை குறிவைத்து காய் நகர்த்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், தனக்கு வாய்ப்பு கொடுத்தாலும், தேர்தலில் நிற்க மாட்டேன்; தனது வாய்ப்பை பிறருக்கு விட்டுக் கொடுப்பேன் என சரத் கூறியுள்ளார். அதேநேரம், அவரது மனைவி ராதிகா தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


