News April 27, 2025
வங்கதேச இடைக்கால அரசைக் கவிழ்க்க திட்டம்?

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்தி கைது செய்ய வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் 5 மூத்த தலைவர்கள், வங்கதேச சட்டம் ஒழுங்கு நிலையை வைத்து, யூனுஸின் இடைக்கால அரசைக் கவிழ்க்க லண்டனில் வைத்து திட்டம் தீட்டியுள்ளனர். இருப்பினும், மாணவர்கள் மத்தியில் ஹசீனாவுக்கு எதிர்ப்பே அதிகம் உள்ளது.
Similar News
News April 27, 2025
86,271 பேருக்கு இலவச பட்டா: அரசாணை வெளியீடு

ஆட்சேபகரமற்ற புறம்போக்கு பகுதிகளில் வசித்து வரும் 86,271 பேருக்கு இலவச பட்டா வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் 29,187 பேர், இதர மாவட்டங்களில் 57,084 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு 6 மாதங்களில் பட்டா வழங்க வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 27, 2025
ரெட்ரோ vs டூரிஸ்ட் ஃபேமிலி..! உங்க சாய்ஸ் என்ன?

வரும் மே 1-ம் தேதி தமிழ் திரை ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் இருக்கு. இரு வேறு கதைக்களத்தை கொண்ட பெரிய படங்கள் வெளிவர உள்ளன. சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ஆக்சன் கதைக்களத்தில் ரெட்ரோ-வும், ஃபில் குட் எமோஷனல் டிராமாவாக சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி-யும் வெளிவர இருக்கின்றன. இரண்டு படங்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. இதில் எந்த படம் உங்கள் சாய்ஸ்?
News April 27, 2025
130 அணு ஆயுதங்கள் தயார்.. பாக். அமைச்சர் மிரட்டல்

பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தினால் இந்தியா போருக்குத் தயாராக வேண்டும் என பாக். அமைச்சர் ஹனீஃப் அபாஸி எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்களிடம் உள்ள 130 அணு ஆயுதங்கள் இந்தியாவை மட்டுமே குறிவைத்துள்ளதாகவும், ஆனால் அவை எங்கு உள்ளது என்பது யாருக்கும் தெரியாது எனவும் மிரட்டும் பாணியில் பேசியுள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியுள்ளது.